Fw: |TMB| Re: சகோதர் PJ அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கோரிக்கை மனு ( தமிழக முதல்வர் அவர்களுக்கு )
From: அபூஅஸீலா <hiaseela@gmail.com>
Subject: |TMB| Re: சகோதர் PJ அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கோரிக்கை மனு ( தமிழக முதல்வர் அவர்களுக்கு)
To: "SARFU DEEN" <sarfudin@hotmail.com>
Cc: tamilmuslimbrothers@
Date: Tuesday, 21 September, 2010, 12:15 PM
சரஃபுதீன் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமாக இருக்கிறீர்களா?
இம்மடல் கிடைக்கப்பெற்றவர்களும் உள்துறை அமைச்சருக்கு இதேபோல் மடல் அனுப்ப வேண்டுமா? அல்லது தகவலுக்காக மட்டும் அனுப்பியதா?
மேலும், சகோ.பிஜே அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி தனி நபர்கள் அமைச்சருக்கு மடல் அனுப்புவது சரியா? ஏனெனில் அமைப்பின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி விண்ணப்பிப்பது அவர் சார்ந்த இயக்கத்தின் சார்பில் இருப்பதே அதிக முக்கியத்துவம் பெறும் என்பது அடியேனின் கருத்து.
இம்மடல் உங்கள் மீதான அக்கரையில் எழுதப்பட்டது. அனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.
வஸ்ஸலாம்.
இம்மடல் கிடைக்கப்பெற்றவர்களும் உள்துறை அமைச்சருக்கு இதேபோல் மடல் அனுப்ப வேண்டுமா? அல்லது தகவலுக்காக மட்டும் அனுப்பியதா?
மேலும், சகோ.பிஜே அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி தனி நபர்கள் அமைச்சருக்கு மடல் அனுப்புவது சரியா? ஏனெனில் அமைப்பின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி விண்ணப்பிப்பது அவர் சார்ந்த இயக்கத்தின் சார்பில் இருப்பதே அதிக முக்கியத்துவம் பெறும் என்பது அடியேனின் கருத்து.
இம்மடல் உங்கள் மீதான அக்கரையில் எழுதப்பட்டது. அனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.
வஸ்ஸலாம்.
On 9/21/10, SARFU DEEN <sarfudin@hotmail.com> wrote:
கடிதங்கள் அனுப்பவேண்டிய விவரங்கள் ...
தமிழக முதலமைச்சர்ஈமெயில் முகவரி : cmcell@tn.gov.in ; cmsec@tn.gov.inFax- 91-44-25671441
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்,
சென்னை.
தேதி: 19.09.2010
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
பொருள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு
தங்கள் மீது அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
மேலும் இக்கடிதம் தங்களை பூரண உடல் நலத்துடன் சந்திக்கட்டுமாக...!
ஒட்டு மொத்த முஸ்லிம்களின் சமுதாய பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சமுதாய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்குடனும்,
பல்வேறு மக்கள் நல பணிகள் முலம் சிறப்பான முறையிலும் செயல்பட்டு வருகின்றது.
மேலும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரமும் செய்து
வருகின்றது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத சில தேச விரோதிகள்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனரும் மற்றும் பல இலட்சக்கணக்கான
முஸ்லிம்களின் பாசத்திற்குரிய தலைவருமான சகோ. பி. ஜைனுல் ஆபிதீன்
அவர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து, சில குண்டர்களையும்
நியமித்துள்ளார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிகின்றோம்.
சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிம் மக்களிடத்தில் மிகுந்த
செல்வாக்குள்ள தலைவராக விளங்குவதால், சமுக விரோதிகளால் அவரது
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு
பிரச்சனை ஏற்படும் என்று அச்சப்படுவதால், சகோ. பி. ஜைனுல் ஆபிதீன்
அவர்களுக்கு வாகனத்துடன் கூடிய 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய
காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இந்த காரணத்திற்காக ஏற்கனவே தமிழக அரசு காவல்துறைபாதுகாப்பு வழங்கி
இருந்தது. கடந்த 2004ல் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
வெளிநாடு பயணம் செல்லும் போது இந்த பாதுகாப்பை திரும்ப
ஒப்படைத்து இருந்தார். தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு
இந்தியா திரும்பியதும், மறுபடியும் காவல்துறை பாதுகாப்பு கோரி
விண்ணப்பிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
தமிழக முஸ்லீம் சமுதாயத்தின் செல்வாக்கு பெற்ற முதன்மை இயக்கமான
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வைக்கப்படும் இக்கோரிக்கையை
விரைந்து பரிசீலித்து, உடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
No comments:
Post a Comment