தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை 17-10-2010, அன்று ராமபட்டினம் என்ற இடத்தில் தம்மாம் மண்டல பொறுப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க முதன்முறையாக பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
ராமபட்டினம் என்ற இந்த இடம் ஷிர்க் மற்றும் பித்அத்துகளின் கூடாரமாக பொள்ளாச்சியில் அமைந்துள்ளது
இக்கூட்டத்தில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் “இது தான் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தெருமுனை கூட்டம் முடிந்த இரண்டு நாட்களில், அந்த பகுதியை சேர்ந்த தவ்ஹீத் சகோதரரை, சுன்னத் ஜமாஅத் ஷிர்க்வாதிகள் அவருடைய வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். மேலும் அந்த சகோதரரை ஊர் நீக்கம் மற்றும் கபரஸ்தானில் இடம் கொடுக்க மாட்டோம் என்பன போன்ற பயங்கர மிரட்டல்களை ????? அள்ளி தெளித்துள்ளனர்.
“தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள்- ஆனால் ஏக இறைவனை மறுப்போர் வெறு
த்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக் க மாட்டான்”. அல்குர்ஆன் 9:32 இந்த சம்பவத்தின் மூலம் அந்த பகுதியில் ஏகத்துவ பணிகளை மேலும் முடுக்கி விடுவதற்கான பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொள்ளாச்சி கிளை நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.
--
முஸ்லிம் மெயில்ஸ் குழுமம் வாயிலாக வெளிவரும் எல்லா ஆக்கங்களுக்கும் அனுப்புனரே பொறுப்பாளியாவார். தொடர்புக்கு muslimmails@gmail.com
நேசம் என்பது வெறும் பாராட்டுவது மட்டும் அல்ல.. நம் நேசத்திற்கு உரியவர்கள் ஏதாவது தவறு செய்கையில் அதை சுட்டிக் காட்டுவதும் நேசமே . நான் பார்த்த மற்றும் படித்தவைகளை இந்த வலைத் தளத்தில் பதிவு செய்கிறேன். அவ்வளவே..
ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!
Friday, October 22, 2010
pollachi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment