மோசடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஆதாரம்
பாக்கர் தனது நலனுக்காக ஒரு ட்ரஸ்ட் அமைத்து விட்டு சங்கம் என்று மக்களை ஏமாற்றி வந்தார். இது குறித்து நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். பதில் இல்லை. எனவே நாமே ஆதார்ங்களை ஒவ்வொன்றாக வெளியிடுகிறோம்.
பாக்கர் பதிவு செய்தது என்ன? அதன் விதிமுறைகள் என்ன? அவரது ட்ரஸ்ட் விதிகளைக் காண்க
பாக்கர் பதிவு செய்தது என்ன? அதன் விதிமுறைகள் என்ன? அவரது ட்ரஸ்ட் விதிகளைக் காண்க
பாக்கர் அமைத்துள்ள ட்ரஸ்டுக்கான விதிகளைக் கவனித்தீர்களா?
ஆயிரம் ரூபாய் கொடுத்து பாக்கர் இந்த டரஸ்டை ஆரம்பித்துள்ளார்.
இவர் ஆரம்பித்த ட்ரஸ்டில் மக்களுக்கு அதாவது பாக்கரை நம்பிய ஏமாளிகளுக்கு உள்ள உரிமை என்ன?
இந்த டரஸ்டில் உறுப்பினரை அதன் நிறுவனரான பாக்கர் தான் நியமனம் செய்வார் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
இதன் உறுப்பினர்கள் முனீர், சித்தீக், தொண்டியப்பா, இக்பால் ஆகியோர் முதன்மை டரஸ்டிகள் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்கள் ஆயுள் கால உறுப்பினராவர். அதாவது இவர்கள் அனைவரும் பாக்கரைப் போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் இவர்களை யாரும் நீக்க முடியாது என்று இந்த விதியில் கூறப்பட்டுள்ளது
இந்த ஐவரும் தமக்காகவே இதை உருவாக்கியுள்ளனர் என்பது உறுதி.
இதன் பெயர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அல்ல. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்பதே இதன் பெயர்
ட்ரஸ்ட் என்பதை வெளிப்படுத்தினால் தமது சாயம் வெளுத்துவிடும் என்பதற்காக ட்ரஸ்ட் என்பதை மக்களிடம் மறைத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று மட்டும் காட்டி ஏமாற்றியது உறுதியாகிறது.
மேலும் மாட்டிக் கொண்ட பிறகாவது இனி ட்ரஸ்ட் வேண்டாம் என்று அறிவித்து சங்கமாக செயல்பட இவர்களுக்கு விருப்பமில்லை. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட் என்பதில் ட்ரஸ்டை விட்டு விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்ப்டுவதற்காக பல்லாயிரம் ரூபாய்களை செலவிட்டு கிழ் நீதிமன்றத்டிலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்காடி வருகிறார்கள்.
மேலும் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் குறைந்த பட்சம் நான்கு பேர் என்றும் அதிக பட்சம் ஒன்பது பேர் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சிய நால்வர் யார் என்று தெரியவில்லை. அப்படியானால் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என்றெல்லாம் சொல்லப்படுவோரின் நிலை என்ன? அவர்கள் உறுப்பினரே இல்லை எனும் போது அவர்கள் எப்படி நிர்வாகிகளானார்கள். சாதாரண உறுப்பினரை மட்டும் இவர்கள் ஏமாற்றவில்லை. மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் என்று கூறப்படும் அனைவருக்கும் அல்வா கொடுத்துள்ளனர் என்பது உறுதி
No comments:
Post a Comment