ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, January 1, 2011

கொடியை காட்டி குறம்பாடும் கொள்ளை[கை]க்குன்றுகள்....

கொடியை காட்டி குறம்பாடும் கொள்ளை[கை]க்குன்றுகள்....?


எஸ்.எம். பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை கள்ளத்தனமாக குடும்ப உறுப்பினர்களின் மூலம் அபகரித்த'அயோக்கியர் தி கிரேட்' அண்ணன் கும்பல், தங்கள் களவாணித்தனத்தை நியாயப்படுத்த வைக்கும் மற்றொரு வாதம், ததஜ எனும் தக்லீத் ஜமாஅத்தின் கொடி போன்றே பாக்கரும் தனது அமைப்புக்கு கொடியை உருவாக்கி மக்களை குழப்பினார் என்று கூறி குறம்பாடுகின்றனர்.
அவர்களின் கள்ளச்சங்கத்தின் கள்ள வெப்சைட்டில் வந்துள்ள செய்தி கீழே:
சரி பெயரில் தான் குழப்பமா என்று பார்த்தால் நாட்டில் எத்தனையோ  கலர் இருக்கிறது அவர்கள் வைத்த கொடிக்கலரும் TNTJ கொடிக்கலரும்  பச்சை, வெள்ளை,கறுப்பு மாதிரி பச்சை கறுப்பு கலரைத் தேர்ந்தெடுத்தனர்.இந்த பொய்யன் கூட்டம் அப்போதாவது இந்த கூட்டம் ஏன் காக்கா அந்த கொடிக் கலர் மாதிரியே இருக்கு இது குழப்பம் வரும் நம்ம வேறு கலர் வைக்கலாம் என்று சொன்னார்களா? இந்த அடிமைகள் அதுவும் இல்லைஎன்று எழுதியுள்ளனர்.  

இவ்வாறு புலம்பும் பொய்யர் பீஜே கும்பல் தங்கள் கூற்றில் உன்ன்மையாளர்கள்
என்றால் தமுமுகவில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட தக்லீத் ஜமாஅத்தின் கொடி எந்த வகையிலும் தமுமுக சாயலில் இருக்கக் கூடாது  என்ற அடிப்படையில் உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
தமுமுகவின் கொடி கருப்பு அதற்கு கீழே வெள்ளை. தக்லீத் ஜமாஅத், அதை அப்படியே புரட்டிப்போட்டு மேலாக பச்சையை கூடுதலாக சேர்த்து  நடுவில் வெள்ளை கீழே கருப்பு என்று வடிவமைத்தார்கள். [அதுவும் அடுத்தவர்  கொடி. அவர்  விட்டுக்கொடுத்ததால் இவர்கள் மானம் தப்பித்தது என்பது தனி விஷயம்] 
பார்க்க படம்;
தமுமுக கொடி
 
 
ததஜ கொடி
 ததஜவுக்கு பின்னால், பாக்கர் உருவாக்கிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வெள்ளையை நீக்கி விட்டு கருப்பு பச்சை[ ததஜ பச்சையிலிருந்து   வேறுபட்ட பச்
சை பார்க்க படம்;
பாக்கரின் இதஜ கொடி
கொடியை உருவாக்கியதை குறைகாணும் இந்த தக்லீத் கூட்டம் ,அன்றைக்கு தமுமுக போன்று கருப்பு வெள்ளையை தேர்ந்தெடுத்து அதில் பச்சையை கலந்தபோது, அண்ணே! தமுமுக  கொடிக் கலர் மாதிரியே இருக்கு இது குழப்பம் வரும் நம்ம வேறு கலர் வைக்கலாம் என்று பீஜேயிடம் சொன்னார்களா? இந்த அடிமைகள் என்றால்  இல்லை. இதன் மூலம் நாங்கள் செய்தால் தவறல்ல. அதையே  மற்றவன் செய்தால் மாய்ந்து மண்ணில் புரண்டு அழுவோம் என்பது சின்னப்புள்ளத்தனமா தெரியலையா  இந்த தக்லீதுகளுக்கு?
 
மேலும், ஒரு அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள், தங்களின் தாய் அமைப்புக் கொடியை ஒட்டியே கொடி உருவாக்குவது அரசியல் அரங்கிலும், சமுதாய அமைப்புகளிலும் புதிய ஒன்றல்ல. உதாரணத்திற்கு தாய்ச்சபையாம் முஸ்லிம்லீக்  கொடியும், அதிலிருந்து பிரிந்த தேசிய லீக் கொடியையும் பாருங்கள்;
முஸ்லிம் லீக் கொடி
தேசிய லீக் கொடி
இரண்டும் பச்சைதான், தேசிய லீக் சற்றே வெளிறிய பச்சை. ஆனால் அருகில் இருந்து பார்த்தால்தான் வித்தியாசம் தெரியும். இரண்டு கொடியிலும் பிறை உண்டு. ஒன்றில் நட்சத்திரம் மைனஸ். ஆனாலும் ஏறக்குறைய 98 சதவிகித ஒற்றுமை இரண்டுக்கும் உண்டு. ஆனாலும் தாய்சபை முஸ்லிம் லீக், இவர்களைப்  போல் தேசிய லீக் அமைப்பை களவாட முயற்ச்சிக்கவும் இல்லை; அதற்கு ஆதாரமாக கொடியை காட்டி நொண்டிச்சாக்கு சொல்லவுமில்லை. ஏனெனில் அவர்கள் நிறைகுடங்கள். அதாவது சிந்திக்கும் திறனுடையவர்கள்.
 
அப்படியாயின் இவர்கள்.......?  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! 

-முகவை அப்பாஸ்.

Source:

No comments:

Post a Comment