ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Monday, February 21, 2011

முஸ்லிம்களின் ஓட்டுக்களை அடமானம் வைக்கும் சந்தர்ப்பவாத அமைப்புகள்


முஸ்லிம்களின் ஓட்டுக்களை அடமானம் வைக்கும் சந்தர்ப்பவாத அமைப்புகள்


கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தி,மு,க, கூட்டணியில் இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த,மு,மு,க,) இப்போது நேர்ஏதிராக அ,தி,மு,க,வை ஆதரிக்கிறதாம், அப்போது. அ,தி,மு,க,வை ஆதரித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் (த,த,ஜ,) 5% இடஓதுக்கீடு
கொடுத்தால் தி,மு,க,வை ஆதரிக்குமாம்.



தங்கள் அடிப்படை உரிமைகளைக்கூட போராடி பெறத் தெரியாத முஸ்லிம் இயக்கங்கள். முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை அடமானம் வைத்து ஆளும் வர்க்கத்திடம் யாசித்து நிற்கின்றன,
காலம். காலமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட ஓரு சமூகத்திற்கு இடஓதுக்கீடு என்பது அடிப்படை உரிமை, இதை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை, கடமையை செய்ய தவறும் அரசாங்கத்தை தட்டிக்கேட்பதும். மறுக்கப்பட்ட உரிமைகளை போராடி பெறுவதும் அடிப்படை உரிமை.
ஆனால். முஸ்லிம் இயக்கங்களோ நாங்கள் எப்போதும் “சந்தர்ப்பவாதிகள் தான் என்பதை மீண்டும். மீண்டும் நிரூபித்து வருகிறார்கள், “நாங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது எங்கள் தனிப்பட்ட விருப்பம். காலம் காலமாக புறக்கணிப்பட்ட எங்கள் சமூகத்திற்கு இடஓதுக்கீடு கொடு.! கொடுக்க வேண்டியது உன் கடமை என்று சொல்ல, திரானி இல்லாத இவர்கள் “நாங்கள் உங்களை ஜெயிக்க வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கு இடஓதுக்கீடு கொடுகிறீர்களா என்று பிச்சை கேட்கிறார்கள்,
பாபர் மசூதி இடிப்புக்குப்பின். பத்து ஆண்டுகளாக (ஓவ்வொரு டிசம்பர் 6-ஆம் தேதியும்) தொடர்ந்து குரல் கொடுத்த வந்த, பாபர் மசூதிக்காக எங்களைப் போல் யாரும் போராடியதில்லை என்று பெறுமை பேசிக்கொண்ட த,மு,மு,க, இப்போது பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து, அந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட செங்கற்களை அனுப்பிய அ,தி,மு,க,வுடன் கூட்டணி வைத்துள்ளது, இதில் குறிப்பிட்டுச் சொல் வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பாபர் மசூதி இடிப்பை கண்டித்த போது, அதை “ஆதரித்த ஓரே தலைவர் ஜெயலலிதாதான், வாழ்க! த,மு,மு,க,வும் அதன் சந்தர்ப்பவாத கொள்கைகளும்!!
2006 தேர்தலில் தி,மு,க,வையும் அதன் தலைவரையும் மிகமோசமாக விமர்சித்த த,த,ஜ, இப்போது வெட்கமே இல்லாமல். அதனுடன் கூட்டணி வைக்க துடிக்கிறது, இதில் தங்கள் “திறமையைகாட்ட” 3,5% என்ற இடஓதுக்கீட்டை 5% ஊயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைவேறு, ஊழலுக்கும். அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பெயர்போன ஓரு கட்சியுடன்; 1.76.329 கோடி ரூபாய் மக்கள் பணத்தை திருடி கையும்களவுமாக பிடிபட்டு. நாடே நாறும் தி,மு,க,வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது என்றால். இவர்களது கொள்கை எப்படிபட்டது என்று பார்த்துக்கொள்ளுங்கள்,
முஸ்லிம் லீக்கா,,,,,, அவர்கள் கதையேவேறு!
கருணாநிதி வந்தாலும் “தொப்பி” கொடுத்து கஞ்சி கொடுப்பார்கள். ஜெயலலிதா வந்தாலும் “ஓல்னி” (தலைக்கு மட்டும் போடும் முக்காடு) கொடுத்து கஞ்சி கொடுப்பார்கள், கருணாநிதியோ. ஜெயலலிதாவோ. யார் எங்க நிக்க சொன்னாலும் கூச்சப்படாம நிப்பாங்க உதயசூரியனிலோ, இரட்டை இலையிலோ!
அதனால நீங்க ஏன்ன செய்றீங்கன்னா?
...
.......
................
........................ 

–அர்ஷத்

No comments:

Post a Comment