ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, March 18, 2011

TNTJ - த.த.ஜ.வை தவிர

காதியானிகளுக்கு எதிராக களமிறங்கிய
அனைத்து முஸ்லிம் அமைப்புகள்!
ஒரு முஸ்லிமின் ஈமானில் இறைவனை ஏகனாக கருதுவதும், முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்பதும், அவர்களுக்கு பின்பு எந்த நபியும் இல்லை என முற்றிலுமாக நம்புவதே ஈமானாகும். 





ஆனால் தனது நாவன்மையால் சதி செய்த நாசகரன் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி, தன்னை நபி என அறிவித்ததுடன் அதற்கு என ஒரு கூட்டத்தை உருவாக்கினான்.
அவனது நச்சு வார்த்தைகளில் மயங்கிய ஒரு கூட்டம், இவனது வார்த்தைகள் உண்மையனாது என நம்பி முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த கூட்டம் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மேலப்பாளையத்திற்குள் மெல்ல மெல்ல ஊடுருவி தனது நச்சை கலந்து வருகிறது. இவர்களின் நச்சு கருத்தை அறியாமல் சுமார் 300 குடும்பங்கள் காதியானிகளாக மாறி விட்டனர். (அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை வழங்கி திரும்ப இஸ்லாத்திற்குள் நுழைய துஆ செய்வோம்) இவர்களும் முஸ்லிம்கள் என்ற உணர்வுடன் நம் சமுதாய மக்கள் பழகி வருகின்றனர்.
இவர்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் முகமாக கடந்த 13.03.2011 ஞாயிறு அன்று மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாஅத்தினரும் ஒன்று கூடும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது!
இதில் இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர், த.மு.மு.க. உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் [ TNTJ - த.த.ஜ.வை தவிர ]
ஆலிம் மற்றும் உலமா பெரு மக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment