ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Thursday, April 28, 2011

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்
SUNDAY, 24 APRIL 2011 13:50
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.




இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது ஆதரவாளர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக வாதியாக மட்டுமல்லாது நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார்.

கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment