மானங்கெட்டு தடம் புரள்வது யார் ?
23-04-2011
நாங்கள் தான் யோக்கியர்கள் என்று புருடாவிடும் தமிழக அண்ணன் ஜமாஅத் மானங்கெட்ட நிலையில் இருந்து வருவதை அவர்களே அவ்வப்போது நிருபிக்க தவறுவது இல்லை ...
அடுத்தவர்களை வசைபாடுவதெற்கென்றே ஒரு இயக்கம். அதெற்கென்று பத்திரிகைகள், இணையதளம் நடத்தி அவதூறகளை அள்ளிவீசி இயக்கம் வளர்க்க யார் மானங்கெட்ட தனமாக அலைகிறார்கள்என்பது மக்களுக்கு தெரியும். இவர்களால் அபகரிக்கப்பட்ட ஏப்ரல் 22'ம் நாள் உணர்வு என்ற பத்திரிகையில் ''டிஎன்டிஜெ பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக் கொண்ட ஜாக் !!!' என்ற கட்டுரையை படித்தவர்கள் உண்மையிலேயே மானங்கெட்டது யார் என்பதை புரிந்துகொள்வார்கள்.
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் (ஜாக்) என்ற ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அது கொண்ட கொள்கையில் தடம் மாறாது தனது பணியை அல்லாஹ்வுக்காக செய்து வருகிறது. பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி ஒன்றுபட்டு இருந்த இந்த ஜமாஅத்தை உடைத்து விட்டு வெளியேறியவர்கள் எந்த காரணத்தை சொல்லி வெளியேறினார்களோ அதைவிட கேவலமான அசிங்கமான செய்கைகளை இவர்கள் செய்து தாங்களது பரிசுத்த தன்மையை அவ்வப்போது மக்கள் காறி உமிழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
யார் மானங்கெட்டநிலையில் இருக்கிறார்கள் என்பதை இனி பாருங்கள் !!
''சீமானை அதிமுக ஆதரித்ததால் நாம் சமுதாய நலனுக்காக வேண்டி அதிமுகவை எதிர்த்து வாக்களிப்பது என்ற முடிவை ஜாக் எடுத்ததாக கூறப்படுகிறது' என்று எழுதியிருக்கிறார்கள். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது புதுப்பேட்டையில் இருக்கும் ஜாக் தலைமையகத்திலா? அல்லது மண்ணடி அரண்மனைக்காரன் தெருவிலுள்ள தமிழ்நாடு அண்ணன் ஜமாஅத் தலைமை பீடத்திலா? ஜாக் எப்போது அவ்வாறு அறிவித்தது என்று இந்த மானமுள்ளவர்கள் நிருபிக்கதயாரா?''
ஆனால் என்றைக்கு த.த.ஜ. திமுக ஆதரவு நிலையை அறிவித்ததோ அடுத்த நிமிடமே தன் ஆதரவை ஜவாஹிருல்லாவுக்கு என மாற்றிக்கொண்டது ஜாக் ... இதுபற்றி சில சகோதர்கள் கேட்டபோது பிஜே திமுக வை ஆதரிப்பதால் நாம மாத்திதான் ஆதரிக்கணும் என்று தாங்களின் கீழ்தரமான நிலைபாட்டை அறிவித்தது ஜாக்' என்று அடுத்த உளறல் கீழ்தரமான மானங்கெட்ட செயலை யார் புரிந்தார்கள் என்பது நாட்டுமக்கள் அறிவார்கள். எப்போது ஜாக்தலைமை இவ்வாறு அறிவிப்பு செய்தது? இதனை நிருபிக்கவேண்டும் என்று இந்த மானமுள்ளவர்களுக்கு சவால் விடுகிறோம்.
அரசியல் நிலைபாடு ஜாக் ஆரம்பித்த நாள்வரை இன்றுவரை அதன்நிலைபாட்டில் தடம் புரளாமல் இருக்கிறது. யார் கீழ்தரமான செயய்கையில் இறங்கி உள்ளார்கள்; என்பதை அண்ணன் அன்று ஆசிரியராக இருந்த அல்ஜன்னத் பத்திரிகையில் எழுதியதை கீழே தருகிறோம் படித்து பார்கட்டும் கீழ்தரமானவர்கள் யார் என்பதை.
__________________________________
உங்கள் பொன்னான வாக்குகள்!
இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!
யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தைஇ வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.
'யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்.' (அல் குர்ஆன் 4:85)
நல்ல காரியத்திலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும்,லஞ்சமும், ஊழலும்,ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை. (நன்றி: பி.ஜே., அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989)
__________________________________
இதைபடிக்கும் சகோதர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் கீழ்தரமானவர்கள் மானங்கெட்டவர்கள் யார் என்பதை.
அடுத்ததாக இவர்களின் மானமுள்ள செயலைபாருங்கள் !
''டிஎன்டிஜெ பெயரை சொல்லி ஜாக் வசூல்'
''தேர்தலுக்கு 10 நாள்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திர ரமவன்னி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவரை போனில் தொடர்புகொண்டு நீங்கள் பள்ளிவாசல் கட்ட கேட்டபணம் ரெடியாக இருக்கிறது அதை வாங்கி கொள்ளுங்கள் எனகூறினாராம். அதிர்ந்த இவர்களது தலைவர் வலைவிரித்து கடைசியில் வசமாக ஜாக் வகையறாக்கள் மாட்டிக்கொண்டார்கள்' என்று இவர்களது வலைவிரிப்பை எழுதியிருக்கிறார்கள். ஒருமாற்று மத சகோதரன் டிஎன்டிஜே ஜாக் இவை இரண்டையும் தவ்ஹிது ஜமாஅத் என்று நினைத்துதான் இவர்களை தொடர்புகொண்டிருக்கிறார். நீங்கள் சொன்ன தவ்ஹீது ஜமாஅத் நாங்கள் இல்லை என்பதை அந்த மாற்று மத சகோதரனுக்கு புரியவைத்திருக்கவேண்டும். ஆனால் இவர்கள் சுதாகரித்துக்கொண்டு வலை விரித்தார்களாம் மாட்டிக்கொண்டது ஜாக்காம்!
இந்த மானங்கெட்டவர்களின் பெயரைச்சொல்லி தான் ஜாக் வசூல் செய்யம் நிலமையில் இருக்கிறதா?
மக்களிடம் ஜாக் தனனுடைய பெயரில்தான் இதுவரை நன்கொடைகளை வாங்குகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த கீழ்தரமானவர்களின் பெயரைச்சொல்லி ஜாக் பணணம் வசூலிக்கவேண்டிய தேவையில்லை. இவர்கள் அபகரித்து வைத்திருக்கும் மேலப்பாளையம் பள்ளிவாசலுக்கு ஜாக் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வசூல் செய்ய கடிதம் அனுப்பியதும், அந்த பள்ளிவாசலை ஜாக்கின் பெயரை பயன்படுத்தி நீதிமன்றத்தில் கள்ளத்தனமாக மனுதாக்கல் செய்ததையும் இவர்கள் மறந்தாலும் நாம் அதன் நகல்களை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளோம்.தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம். இறுதியாக இவர்கள் மானங்கெட்ட நிலையை பாருங்கள்!
''பள்ளிவாசல் கட்டுவதாக இருந்தாலும் அதை உங்கள் இடத்தில்தான் கட்டவேண்டும் அடுத்தவன் நிலத்தை அனியாயமாக அபகரிக்ககூடாது' என்று எழுதி உள்ளார்கள்.
சாத்தான் வேதம் ஓதுகிறது !! அப்படித்தான் சொல்லவேண்டிஇருக்கிறது !!
மேலப்பாளையம் கடையநல்லூர் பேரணாம்பெட் திருச்சி ஆகிய ஊர்களில் ஜாக் நிர்வாகத்தின் கீழ் இருந்த பள்ளிவாசல்களை அபகரித்து வைத்துளள்ள இவர்கள் நம்மைப்பார்த்து அடுத்தவன் நிலத்தை அபகரிக்காதே என்று சொல்வது மானங்கெட்ட கீழ்தரமானவர்கள் யார்? ஜாக்கா? இல்லை டிஎன்டிஜேயா என்பது இதன்மூலம் நிருபணமாகிறது.
அல்லாஹவை பற்றிய பயம் இருக்கும் ஒரு முஸ்லிமும் இவர்களைப்போல் மானங்கெட்டு கீழ்தரமாக அலையமாட்டான். அடுத்தவர்களை வசைபாட ஒருஅமைப்பு சில பத்திரிகை மார்கம் படித்தவர்கள் என்றபோர்வையில் சிலஅரைவேக்காடுகள் இவைகளை வைத்து பாவங்களை செய்து குவிக்காமல் மக்களுக்கு பயனுள்ள இஸ்லாத்தின் போதனைகளை மட்டும் சொல்லி இயக்கத்தை வளர்க்கபாடுபட்டு கொள்ளட்டும் இதுபோல் மானங்கெட்ட செயல்களை இனியும் செய்யமால் இருக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.
__________
contact@jaqh.org
No comments:
Post a Comment