ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Monday, April 11, 2011

TNTJ தேர்தல் நிலைப்பாடு-இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 


திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில் தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழுவில் தீர்மானிக்கபட்டது.
சமூக சிந்தனையுடன் , சமுதாய முன்னேற்றத்துக்காக  TNTJ எடுக்கும் மார்க்க மற்றும் அரசியல் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரிப்போம்.
மேலும் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயல்படும். என்றார்.

No comments:

Post a Comment