வெல்ஃபேர் பார்டி ஓட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற கூறுகிறார்களே.?
தேர்தலில் போட்டியிடும் வேட்பளர்களுக்கு ஜமாஅத்தின் ஆதரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் வேட்பாளர் ஆதரவு குறித்து தெளிவாக இருக்கின்றார்களா?
அனைவரிடமும் அரசியல் குறித்து ஆரம்ப காலத்தை விட தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் ஆரம்பத்தில் தேர்தலில் ஓட்டு போடக்கூடாது என்று கூறியது. பிறகு பாசிச சக்திகள் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஓட்டு போடவும், நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்ற செய்தியையும் மக்களிடம் முன்வைத்தது. பாருங்கள் தற்போது அனைவரும் இந்த வார்த்தையை ஏற்று நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்று கூறி வருகின்றனர். தற்போது நடைபெற்ற தேர்தலில் ஒரு இணையதளமே இருந்தது. வேட்பாளர்கள் குறித்த முழுவிவரத்தையும் அதில் வைத்து இவற்றில் நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்றனர். தேர்தல் தற்போது எளிமையான முறையில் போஸ்டர், ஆடம்பரம் இல்லாது நடைபெற்று இருக்கிறது. இது ஒரு நல்ல ஆரம்பம்.
இஸ்லாம் அரசியலுக்கு எதிரானது கிடையாது. இஸ்லாத்தில் அதிக விஷயங்கள் அரசியல் குறித்து கூறப்படுள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம் இறைவனுக்கு தான் இருக்கிறது என்ற விஷயம் தெளிவாக உள்ளது. ஜமாஅத்தும் அந்த விஷயத்தில் தெளிவாக உள்ளது. மக்களாட்சி நடைபெறும் நம் நாட்டில் சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்றது. அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்படக்கூடாது, மக்களுக்கு பாதிப்பில்லாத சட்டம் இயற்றப்பட வேண்டும், நேர்மையான ஆட்சியாளர் வேண்டும் என்றால் நாம் அங்கு முன்மாதிரியான நபர்களை அனுப்பும் போது தான் அது நிறைவேறும். உதாரணமாக தமிழகத்தில் திருமண பதிவு சட்டத்தை எடுத்து பாருங்கள் என்ன நடந்தது. நமக்கு போதிய நபர்கள் இல்லாததால் நமக்கு பாதிப்பு ஏற்படும் சட்டம் வந்தது. பிற்கு அனைத்து அமைப்புகளின் முயற்சியில் அதில் மாற்றம் வந்தது. ஆகவே இத்தகைய நோக்களுக்காக தான் ஜமாஅத் அரசியலை அனுகுகிறது.
வெல்ஃபேர் பார்டி ஓட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற கூறுகிறார்களே.?
10-20 வருட தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெல்ஃபேர் பார்டி ஜமாத்துடைய அரசியல் கட்சி கிடையாது. அது கிருஸ்துவர்கள், தலித்துக்கள் என பல்வேறு நபர்களையும் ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி. அப்படி தான் அதன் அமைப்பு சட்டமும் உள்ளது. நான் மேலே கூறப்பட்டுள்ளது போல் மக்களுக்கு எதிரான ஆட்சி வரக்கூடாது, இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கவும், நேர்மையான ஒழுக்கமான ஆட்சி வர வேண்டியும் தான் இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் சேர்ந்துள்ள அனைவரும் இதை தெளிவாக உணர்ந்துள்ளனர். காயத்திரி மந்திரத்து ஆரம்பமானது என்கின்றனர். இப்படிப்பட்டவர்களின் தவறான பிரச்சாரம், விமர்சனங்களை பற்றி ஆராய தேவையில்லை. ஏனெனில் எங்களுக்கு நிறைய பணிகள் இருக்கின்றது. அவற்றை செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. மெளலானா மெளதூதி கூறிய கருத்தை நினைத்து பார்க்க வேண்டும். என்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் தந்திருந்தால் நான் புத்தகங்களையும், தஃபீமுல் குர்ஆனையும் எழுதியிருக்க மாட்டேன் என்றார். தவறான பிரச்சாரம் என்று அவர்களுக்கே தெரியும் நாங்கள் வேறு கூற தேவையில்லை.
இன்றைய அரசியல் சூழல் நன்றாக தெரியும் நன்றாக இருந்தவர்கள் எல்லாம் அரசியலுக்கு போனவுடன் எப்படி மாறியுள்ளனர். ஆகவே இப்படிப்பட்ட சூழலை மாற்ற வேண்டும். இது ஒரு நல்ல ஆரம்பம் இன்னும் நிறைய பணிகள் அரசியலில் செய்ய வேண்டியுள்ளது.
6. தேர்தலில் போட்டியிடும் வேட்பளர்களுக்கு ஜமாஅத்தின் ஆதரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் வேட்பாளர் ஆதரவு குறித்து தெளிவாக இருக்கின்றார்களா?
ஆரம்பத்திலே கூறியது போல், நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஜமாஅத்தின் ஆரம்பக்கால முழக்கம் தற்போது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் அத்தகைய கருத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர். நமது தேர்வு என்பது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நமது ஊழியர்கள், பொறுப்பாளர்களின் கருத்தை பெற்று பிறகு தான் நமது முடிவை அறிவிக்கின்றோம் ஆகையால் இந்த விஷயத்தில் ஊழியர்கள் தெளிவாக உள்ளனர்.
No comments:
Post a Comment