திருவிடைச்சேரி படுகொலை; திரும்பவும் உண்மையை ஒத்துக் கொள்ளும் ஏகத்துவம்!
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

திருவிடைச்சேரியில் புனித ரமளானில் புனித பள்ளியில் வைத்து இரண்டு முஸ்லிம்களை படுபாதக படுகொலை நிகழ்த்திய ஹாஜிமுஹம்மதுவை தற்காப்புவாதியாக அடையாளம் காட்டிய அண்ணன், ''நீதிமன்றத்துக்குப் போனாலும் கேசு அப்படித்தான் முடியும். அவரு தற்காப்புக்காக செஞ்சேன்னு சொன்னா அதுக்கு தண்டனை கொடுக்கமுடியாது'' என்றெல்லாம் அண்ணன் நியாயப்படுத்தியதை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
ஆனால் அண்ணன் கூற்றுக்கு மாற்றமாக, குத்புதீனை கொலைக் குற்றவாளியாக, ஹாஜி முகம்மதுவை கொலைக் குற்றவாளியாக இன்னும் சொல்லப்போனால் மரணதண்டனைக்கு வழிவகுக்கும் செயலை செய்தவர்களாக ஏகத்துவம் இதழ் அக்டோபர்2010, 18 ஆம் பக்கத்தில், ''ஹாஜி முஹம்மது இந்த காரியத்தை செய்வார் என்று தெரிந்திருந்தால், அவரது மைத்துனர் குத்புதீன் கூட அவரை அழைத்திருக்க மாட்டார். இப்போது தானும்[குத்புதீன்] கொலைக் குற்றவாளியாகி, தனது மச்சானும் [ஹாஜிமுஹம்மது] கொலைக் குற்றவாளியாகி மரண தண்டனைக்கு வழிவகுக்கின்ற ஒரு காரியத்திற்கு அவர் துணை போயிருக்க மாட்டார் என்று எழுதி உண்மையை போட்டுடைத்தது ஏகத்துவம். அதோடு 'தற்காப்பு கொலை' என்று சப்பைக்கட்டு கட்டிய அண்ணின் முகத்தில் அரைக்கிலோ கரியையும் பூசியது.
இப்போது அதே ஏகத்துவம், மீண்டும் திருவிடைச்சேரி விஷயத்தில் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' பாணியில் தன்னையறியாமல் ஒரு உண்மையை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு தொலைக்காட்சி பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், 'மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பேசினாராம். இதனால் அவரை சகட்டு மேனிக்கு சாடியுள்ளது ஜூன் 2011 ஏகத்துவம் தலையங்கம்.
நன்றாக சிந்திக்க வேண்டும். ஜவாஹிருல்லாஹ், திருவிடைச்சேரி சம்பவத்திற்கு காரணமான ததஜவினர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லவில்லை. அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பொதுவாகத்தான் கூறியுள்ளார். அப்படியிருக்க, ததஜவின் ஏகத்துவம், தானாக முன்வந்து அவரை சாடுவதிலிருந்து 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது' என்பது தெரிகிறதல்லவா? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டுகிறதல்லவா? மடியில் கனமில்லைஎனில் வழியில் இவ்வளவு பயம் ஏனோ?
இப்படி யாரேனும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, 'தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரி சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் இவர் [ஜவாஹிருல்லாஹ்] இதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதற்கு காரணம்தவ்ஹீத் ஜமாத்தை கருவருப்பதற்கு இந்த தேர்தல் களத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்' என்று ஒரு 'பிட்டை' சொருகுகிறது ஏகத்துவம்.
ஏகத்துவத்தின் கூற்றுப்படி தவறு செய்தவர் துப்பாக்கியால் சுட்டவர் மட்டுமே என்றால், அண்ணன் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ஏனோ? இன்றுவரை அவர்கள் ஜாமீனில் தானே இருக்கிறார்கள். அவர்கள் மீதான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லையே! இது எதைக் காட்டுகிறது? துப்பாக்கியால் சுட்டவர் மட்டுமன்றி, அண்ணன் ஜமாஅத்திற்கும் உள்ள தொடர்பை காட்டுகிறதே! அண்ணன் ஜமாஅத்தினர் மீது போடப்பட்டது பொய் வழக்கு எனில், அதை உடைப்பதற்கு அண்ணன் ஜமாஅத்திற்கு துப்பில்லையா? 'பேரியக்கம் என்று பீற்றிக் கொள்ளும் அண்ணன் ஜமாஅத்தினர் மீது போடப்பட்ட கொலை வழக்கை இன்றுவரை சந்திப்பதன் அர்த்தம் என்ன? சொல்லுமா ஏகத்துவம்?
எனவே, பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பொதுவாக சொன்ன வார்த்தையை கண்டு பாய்ந்து வந்து அவரை பிராண்டுவதன் மூலம், திருவிடைச்சேரி படுகொலையில் தங்கள் கரமும் ஊசலாடியுள்ளதை தன்னையறியாமல் ஒப்புக்கொண்ட ஏகத்துவத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இதை படித்தவுடன் அண்ணனின் பினாமிகள் பாய்ந்து வரலாம். அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது, சம்மந்தமில்லாமல் ஜவாஹிருல்லாஹ்வை சாடியதன் மூலம் ஏகத்துவம்சம்மன் இல்லாமல் ஆஜராகியுள்ளதா இல்லையா? என்பதை விளக்க அண்ணனுக்கு துணிவிருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுத சொல்லுங்கள் என்பதுதான்.
சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்பதைத்தான் ஏகத்துவத்தின் எழுத்து உணர்த்துகிறது. சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.
சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்பதைத்தான் ஏகத்துவத்தின் எழுத்து உணர்த்துகிறது. சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.
-அப்துல் முஹைமீன்.
No comments:
Post a Comment