அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ.பாக்கர் அவர்களுக்கு
பொய்யன் TJ வலைத்தளத்தில் கீழ்க்கண்ட தனிநபர் தாக்குதல் என்பதைவிட ஒருவரின் வணக்கத்தை விமர்சனம் செய்துள்ளார்கள். அவர்கள் வணக்கம் ஏற்பதும், நிராகரிப்பதும் இறைவனின் செயல் அதில் படைக்கப்பட்ட நமக்கு எந்த உரிமையும் இல்லாதபொது ஏன் இவ்வாறு எழுத வேண்டும் ?
ஹதீத் மற்றும் குர்-அன் அடிப்படையில் விளக்கவும்.
நியாயமான வார்த்தைகளில் விமர்சிப்போம் (இதற்கான பதிலில் அவர்களின் வணக்கம் பற்றி பேசவேண்டாம்) தாங்களின் பதில் வேண்டி ஆவலுடன். //இவரெல்லாம் உம்ராவுக்கு போனால் அந்த புனிதத்தளத்திற்கு தான் இழுக்கு. சைத்தான் உம்ரா செய்தது போல. பித்னாக்களின் தலைவன் செங்கிஸ்கான் செய்த உம்ராவின் பயன் என்ன?//
-ஹிதாயத்.
வ அலைக்கும் வஸ்ஸலாம்,
சகோதரர் ஹிதாயத் அவர்களே!
இந்த கடிதத்தை நீங்கள் அவர்களுக்கு அனுப்பி கேட்டு இருக்க வேண்டும். அதை நம்மிடம் கேட்கிறீர்கள்.
முதலில் தாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பொய்யன் என பெயர் வைத்து அத்தனை தவ்ஹீத் அமைப்புகளையும் விமர்சிக்கும் இவர்களிடமிருந்து நியாயத்தையும் சத்தியத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
//இவரெல்லாம் உம்ராவுக்கு போனால் அந்த புனிதத்தளத்திற்கு தான் இழுக்கு. சைத்தான் உம்ரா செய்தது போல. பித்னாக்களின் தலைவன் செங்கிஸ்கான் செய்த உம்ராவின் பயன் என்ன?// என அவர்கள் கேட்ட கேள்விக்கு....
//அவர்கள் வணக்கம் ஏற்பதும், நிராகரிப்பதும் இறைவனின் செயல் அதில் படைக்கப்பட்ட நமக்கு எந்த உரிமையும் இல்லாதபொது ஏன் இவ்வாறு எழுத வேண்டும்?// என தாங்களே இதற்கான அழகான பதிலையும் சொல்லி இருக்கிறீர்கள். நாம் வேறு என்ன பதிலை சொல்ல முடியும்?
இருந்தாலும் ஒரு ஹதீஸ் நமக்கு ஞாபகம் வருகிறது. ரோம் படைக்களுக்கு எதிராக படைதளபதியாக சென்ற உஸாமா (ரழி) அவர்கள், எதிரி படையில் இருந்த ஒருவரை கொல்ல முனைந்தார்கள். அப்போது அவர், கலிமாவை மொழிந்தார் ஆனாலும், அவரை கொன்று விட்டார்கள். இந்த சம்பவத்தை நாயகத்திடம் உஸாமா அவர்கள் சொன்னப் பொழுது, நாயகம் (ஸல்) கடுமையாக கோபப்பட்டார்கள். அதற்கு உஸாமா அவர்கள் “நாயகமே, அந்த மனிதர் என்னிடமிருந்து தப்பிப்தற்காக கலிமா சொன்னார்” என பதில் அளித்ததும், உஸாமாவை பார்த்து, “நீங்கள் அவரது நெஞ்சை பிளந்து பார்த்தீரா” என கேட்டார்கள்.
ஆகவே இறைவனுக்காக செய்யும் செயலுக்கு இறைவனே கூலி கொடுக்கின்றான். அது குறித்து விமர்சிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லை என்பதே இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கருத்தாகும்.
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்.
வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment