ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Wednesday, July 13, 2011

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு –3

R.ரஹ்மத்துல்லாஹ் என்பவர் 17.06.2011  ஏர்வாடி ஜாக்கிற்கு அனுப்பிய கடிதத்திற்கு,ஏர்வாடி ஜாக்கிலிருந்து பி.ஜேக்கு அனுப்பப்பட்ட பதில் வருமாறு:-

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…………

சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு,

உங்களையும்,நீங்கள் பாராட்டிய ஜாக்கின் முன்னால் தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனீ அவர்களையும்,ஒரு சேர பிறை விஷயத்தில் விவாதத்திற்கு நாங்கள் அழைத்திருந்தோம். அதன் பிறகு அந்த அழைப்பை நீங்கள் ஏற்க மறுத்து,காலம் தாழ்த்தியதோடு,பிறகு அதிகமான மக்கள் உங்களை வற்புறுத்தி நிர்பந்தம் செய்ததால்,முழு கோபத்துடன் எங்களுக்கான பதிலை உங்களுக்கு சொந்தமான இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள்.

அதில் தாங்கள் எழுதியிருந்த பொய்களையும்,இருட்டடிப்புகளையும்,வரிக்கு வரி சுட்டிக்காட்டிநாங்கள் உங்களுக்கு 9-6-2011 அன்று பதிவுதபால் மூலம் பதில் அனுப்பியிருந்தோம். 

எங்களது பதிலுக்கு R.ரஹ்மத்துல்லாஹ்,விவாதக்குழு என்று கையெழுத்திட்டு 17-06-2011 அன்று உங்கள் மூலமாக ஒன்பது வரியில் எழுதிய கடிதம் ஒன்று பதிலாக வந்தது. மேலும் தங்களுடைய பொய்களையும்,இருட்டடிப்புகளையும் நாங்கள் சுட்டிக்காட்டிய பின்பும்,நீங்கள் அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்ததிலிருந்து,நாங்கள் எழுதியதை நீங்கள் ஒப்புக்கொண்டதாக நாங்கள் புரிந்துகொண்டோம்.

//நேரடி விவாதத்திற்கு சவால் விட்டிருந்தீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது அதிலிருந்து அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள்.//பி.ஜேவிற்காக ரஹ்மத்துல்லாஹ் விவாதக்குழு

நீங்கள் பாராட்டிய எஸ்.கமாலுத்தீன் மதனீ அவர்களையும்,பி.ஜேவாகிய உங்களையும் சேர்த்து விவாதத்திற்கு வாருங்கள் என்றுதான் நாங்கள் சவால் விட்டிருந்தோம். ஆரம்பத்தில் நீங்கள் ஜாக் முன்னால் தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனியை பாராட்டி எழுதியதோடு,அவருக்கு உதவி செய்யுங்கள் என்று உங்கள் இயக்கத்தினருக்கு அறைகூவல் விடுத்தீர்கள். பின்னர் நாங்கள் விவாதத்திற்கு எஸ்.கமாலுத்தீன் மதனீயை அழைத்து வாருங்கள் என்று சவால் விட்டவுடன்,நீங்களே நீங்கள் எழுதியதற்கு முற்றிலும் முரண்பட்டு அந்தர் பல்டி படித்தீர்கள். எஸ்.கமாலுத்தீன் மதனியை திட்டி எழுதிவிட்டு நீங்கள் மட்டும் விவாதத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டு இணையத்தளத்தில் பதில் எழுதியிருந்தீர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

//நேரடி விவாதத்திற்கு தயார் என்றால் தெளிவாக அதை எழுதி அனுப்பவும். உடனே விவாதம் என்றைக்கு என்பதற்குரிய தேதியை முடிவு செய்ய நாம் தயாராக இருக்கிறோம். //பி.ஜேவிற்காக ரஹ்மத்துல்லாஹ் விவாதக்குழு

மேற்கண்ட பதிலின் மூலம்,நீங்கள் எழுத்து மூலமான இணைய விவாதத்திற்கு வர முடியாது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என நினைக்க தோன்றுகிறது. பி.ஜே என்பவர் எந்த முறையிலும் விவாதம் செய்வார் என்று உங்கள் அமைப்பினர் தம்பட்டம் அடிப்பதை தாங்களும் அறிந்த ஒன்று தான். தற்போது அதற்கு மாற்றமாக நேரடிவிவாதத்திற்கு மட்டும் தான் வருவேன்,எழுத்து மூலமாக விவாதத்தை கண்டு கொள்ள மாட்டோம் என்பது பேல் பதில் எழுதுவது,கழுத்தை கொடுத்தாலும்,எழுத்தை கொடுக்கக்கூடாது என்ற பயத்தினாலா?

யாரிடமும் எவ்விதத்திலும் விவாதம் செய்யும் துணிச்சல் தற்போது தாங்களுக்கு இல்லாமல் போனது எதனால்? தாங்களின் ஆரம்ப காலகட்ட பிரச்சாரத்தில் இருந்த சத்திய தன்மை தற்போது எங்கே சென்றது? தற்போது பொருளாதார பலம் மேலோங்கி விட்டதால்,ஏற்கனவே தாங்களிடம் இருந்த சத்திய தன்மை எடுபட்டுவிட்டதா?

//இணையதளத்தில் தான் விவாதம் என்ற இழுத்தடிப்பு வேலைக்கு நீங்கள் சவால் விடவில்லை. நீங்கள் அதில் உடன்பாடு உள்ளவரும் அல்ல! // பி.ஜேவிற்காக ரஹ்மத்துல்லாஹ் விவாதக்குழு

உங்களையும்,எஸ்.கேயையும் சேர்த்து ஒரு சேர விவாதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்த நாங்களே,எழுத்து மூலமான விவாதம் செய்து கொள்ளலாம் என்று உங்களுக்கு,நாங்கள் எழுதிய பதிலில் காரண காரியத்துடன் தெளிவாக குறிப்பிட்டிருந்தும், எங்களுக்கு எழுத்து மூலமான விவாத்தில் உடன்பாடு கிடையாது என்று நீங்களாகவே சுயமுடிவு எடுத்து மழுப்பல் பதில் அளித்துள்ளீர்கள்.

இணைய விவாதம் என்பது இழுத்தடிப்பு வேலை என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உலகிலேயே இது போன்ற கருத்தை முதன் முதலாக நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். இணைய விவாதம் எவ்வகையில் எல்லாம் பயனுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நீங்கள் பிறை விஷயத்தில்,எழுத்தை கொடுத்து மக்கள் மன்றத்தில் மாட்டிக்கொள்வோமோ என்று பயப்படுவதினால்,எழுத்து முறையிலான இணைய விவாதத்தை இழுத்தடிப்பு வேலை என்று கூறுகின்றீர்கள்.

உங்கள் இயக்கத்தினர் மூலமாக நேரடியாகவும்,மறைமுகமாகவும் இணையத்தில் பல குழுமங்கள் இயக்கப்பட்டு அதன் வாயிலாக பல தலைப்புகளில் எழுத்து விவாதங்கள் நடைபெற்று வருவது இழுத்தடிப்பு வேலைக்காகத்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் சொல்ல வருகின்றீர்களா? உங்களிடம் கேள்வி கேட்டு,நீங்கள் இணையத்தில் இதுவரை பதில் அளித்தது எல்லாமே இழுத்தடிப்பு வேலைக்காகத்தான் நடந்ததா? இல்லையென்றால் இனிமேலாவது இணையத்தின் மூலமாக எந்த விதமான மார்க்கப் பிரச்சாரத்தையும் செய்ய மாட்டேன் எல்லாமே நேரடியாகத்தான் செய்வேன் என்று நீங்கள் பகிரங்கமாக அறிவிப்பீர்களா? என்பதையும் நீங்கள்தான் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளீர்கள்.

எனவே இணையத்தில் விவாதம் செய்வது அதிகமான பலன் தரும் என்று நாங்கள் நம்புவதாலும்,நேரடி விவாதத்தில் நாங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் உள்ளதாலும்,எம்முறையிலும் விவாதம் செய்யும் திறமைபெற்ற நீங்கள் எங்களுடைய சவாலை ஏற்று,எழுத்து மூலமான விவாதத்திற்கு வரும்படி மீண்டும் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். தாங்கள் எழுத்து மூலமாக இணையத்தில் எங்களுடன் விவாதிக்க மறுக்க மாட்டீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இதை எழுதிக்கொள்கின்றோம்.

மேலும் எழுத்து மூலமான இணைய விவாதம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒப்பந்தத்தை,ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து நடத்திக்கொள்வோம் என்பதை இதன் மூலம் அறிவித்துக்கொள்கின்றோம். எனவே தாங்களுக்கு தோதுவான ஒரு தேதியை ஒப்பந்தம் செய்வதற்காக அறிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே இது குறித்து தாங்களின் விரைவான பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம். உங்கள் பதிலை அனுப்ப வேண்டிய முகவரி.

விவாதக்குழு தலைவர்,ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்,97-A,வடக்கு மெயின் ரோடு,ஏர்வாடி –627103.  email:admin@jaqh.in
இப்படிக்கு,

விவாதக்குழு தலைவர்,
ஜாக் ஏர்வாடி.

இந்த அழைப்பு கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பி.ஜெய்னுல் ஆபிதீன்,தலைவர்,தமிழ்நாடு தஹீத் ஜமாஅத்,30 அரண்மனைக்காரன் தெரு,மண்ணடி சென்னை-1


17.06.2011  R.ரஹ்மத்துல்லாஹ்வின் கடிதத்திற்கு நாம் பதில் அனுப்பியதற்கு   6-7-2011 தேதியிட்டு சையது இப்றாஹீம் என்பவர் அனுப்பிய கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
PIRAI_VIVADA_ALAIPU_3
பிறை விவாத அழைப்பு 3 க்கு சையது இப்றாஹீம் மூலமாக அனுப்பப்பட்ட பதில் கடிதம்


No comments:

Post a Comment