ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Wednesday, July 20, 2011

குழப்பம் விளைவிக்க வந்த சகோதரர்களிடம் அன்புடன் நடந்து கொண்ட இதஜ தலைவர்கள்!


குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள் என்றதும் பல அவதூறுகளை பரப்பி 'ஐந்து பேர் கூட இவர்களின் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் ' என்றெல்லாம் அகமகிழ்ந்தோரின் எண்ணங்களில் இடி விழும் அளவிற்கு முதல் நாளன்று மண்ணு சல்வா உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது!
இதைக் கண்ட தக்லித் ஜமாத்தினர்   மறு நாள் நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் உணவக வாசலில் வந்து 'விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் இயக்கங்கள் ' என கடுமையாக சாடி நோட்டீஸ் ஒன்றை வாசலில் நின்று விநியோகிக்க சற்று சலசலப்பு ஏற்பட்டது !
அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இது போன்று யாரேனும் நோட்டீஸ் விநியோகித்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? என நம் சகோதரர்கள் கோபப்பட்ட போது அவர்களை மாநில செயலாளர் செங்கிஸ்கான் கட்டுப்படுத்தி, அந்த த.த.ஜ.சகோதரரை தோளில் கை போட்டு வாஞ்சையோடு நலம் விசாரித்து 'நோட்டீஸ் கொடுப்பது உங்கள் உரிமை   தாரளமாக எனக்கும் கொடுங்கள்! ஆனால் அந்த உரிமையை த.த.ஜ வினராகிய நீங்கள் மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும்' என கூறிய போது அந்த த.த.ஜ சகோதரர் 'நலமாக இருக்கின்றீர்களா?    பாக்கர் அண்ணன் எப்படி இருக்கிறார்? என நலம் விசாரித்தார்!  உடனே கீழே  வந்த தொண்டியப்பா , மற்றும் பாக்கரிடம் அந்த சகோதரை செங்கிஸ்கான் அறிமுகப் படுத்தி  சகோதரருக்கு   ஸலாம் சொல்லி கை குலுக்கி நலம் விசாரித்தனர். இதை அங்கு வந்த பொதுவான மக்கள் பாராட்டினர்!


அவர்களின் கூட்டத்தில் இது போன்று நடந்திருந்தால் பெரும் ரகளை செய்திருப்பார்கள் ! ஆனால் கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் வந்து விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்!
அதனால் தான் அவர் இதஜ பெயரை அபகரித்த  போது கூட அமைதி காத்தோம்!.
கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் நடந்தால் தான் அவர்கள் எந்தக் காலத்திலும் இணைய மாட்டார்கள்! எனும் பி.ஜே.வின் பிரிவினைக் கொள்கையை நாம் அன்பால் முறியடிப்போம்! இன்ஷா அல்லாஹ்! 
-இப்னு ஹுஸைன்.

No comments:

Post a Comment