ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, August 14, 2011

சாரமேடு கிளையில் மாபெரும் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்



செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 13, 2011, 20:12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக கடந்த 10.07.2011 அன்று மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம், லாரி பேட்டை பகுதியில் நடைபெற்றது.
இதில் மவ்லவி தமீம் அவர்கள் “இன்றைய இளைஞர்களின் நிலை?” என்ற தலைப்பில், செல்போன் என்ற ஒரு சாதனத்தால் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் எவ்வாறு கெட்டு போகிறார்கள் என்பதையும், இளைஞர் சமுதாயம் எந்த அளவிற்கு சீரழிந்து கொண்டு இருக்கிறது என்பதையும் விவரித்து பேசினார்.


அடுத்ததாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள், வரதட்சணையும் அதன் விசாரணையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் , நானோ, என்னுடைய மகளுக்கோ, என்னுடையே மகனுக்கே, எனக்கோ, திருமணத்தின் போது பணமாகவோ, பொருளாகவோ, எந்த விதத்திலும் வரதட்சணையாக வாங்க மாட்டோம், வரதட்சணை கொடுக்க மாட்டோம், என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment