ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Thursday, August 25, 2011

மன்னடி TO கோடம்பாக்கம்...!

 சிலமாதங்களுக்கு முன் த.மு.மு.க வின் ஆம்புலன்ஸ் ஒன்று சன்டி.வி.யில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் ஒன்றில் நடித்ததாக த.த.ஜ.வின் இனையதளத்தில் படிக்க நேர்ந்தது.(பார்க்க: http://www.tntj.net/39694.html
).

நாடகத்தில் நடிக்கும் தமுமுக ஆம்புலன்ஸ்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, July 1, 2011, 11:56
செய்திகள்
பொதுமக்களிடம் அவசர காலத்தில் நோயாளிகளுக்கு சேவைசெய்யப்போகின்றோம் எனக் கூறி வசுல் செய்து ஆம்புலன்சைவாங்கியது நாடகத்தில் நடிக்க விடத்தானா?


சமூக சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ், நாடகத்தில்நடிக்க வைக்கப்பட்டதை குறைகூறி இருந்தனர். ஆனால் இன்றோத.த.ஜவின் சகர் நேரத்தில் ஒளிபரப்பப்படும் தவறான வாதங்களும்தக்க பதில்களும் நிகச்சியில், வரும் வெள்ளிகிழமைnbsp;காலை 3:30மணியளவில் மூடநம்பிக்கையின் அடிப்படையில், முஸ்லிம்கள் செய்யும் அனாச்சாரங்களை விழிப்புணர்வு நாடகமாக(?) சில மூடர்களை நடிக்க வைத்து, ஒளிபரப்ப இருப்பதாக ஒரு வீடியோ கிளிப்பிங்கை காட்டினார்கள்!.


இந்த வீடியோ கிளிப்பிங்கில் காட்டப்பட்ட ஒரு காட்சியில், இரண்டுநபர்கள் பாவா வேஷம் பூண்ட நபரின் காலில் விழுவது போன்றும் ஒருகாட்சியை வைத்து (நடிப்பே என்றாலும் மனிதரின் காலில்விழலாமா?) உள்ளார்கள். மேலும் வேஷம் பூணுவது இஸ்லாத்தில்அனுமதிக்கப்பட்ட ஒன்றா?. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!. மக்கள்செய்வதைத்தானே நாடகவடிவில் காட்டுகின்றோம் என்று சொல்லவருவீர்களேயானால், சினிமாவிலும் சீரியலிலும் மக்களின்நடவடிக்கையையே படமாக்கி காட்டுகின்றார்கள்!. பின் அந்தநாடகத்தைய ும் நாம் ஆதரிக்க வேண்டிவரும்!.





சமுதாயத்தில் புரையோடிபோகியுள்ள அனாச்சாரங்களுக்கு எதிராக மார்க்க பிரசாரம் செய்ய வேண்டியதுதான்!. ஆனால் அதை நாடகவடிவில் சிலரை நடிக்க வைத்து, அதை படமாக்கி ஒளிபரப்ப மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?. அதற்கு குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் என்ன ஆதாரம் என இவர்கள் விளக்குவார்களா?. மக்கள் கலைஇலக்கிய கலகம் போன்ற அமைப்புக்கள்தான் இது போன்று நாடக வடிவில் தங்களின் கொள்கைகளை பிரச்சாரமாக செய்வார்கள். இது இஸ்லாத்தின் வழிமுறை அல்ல!.


முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், ஏகத்துவ பணிக்காகவும், ஜக்காத் போன்ற மார்க்க கடமைக்காகவும் வழங்கப்படும் நிதியை இதுபோன்று நாடகத்திற்கு பயன்படுத்திவிட்டு பின், தவ்ஹீது ஜமாத்தின் பணிக்காக ஒருவருடத்திற்கு சுமார் 52 இலட்சம் தேவை உள்ளது. தவ்ஹீது ஜாமாத், நிதி சுமையில் சிக்கி தவிக்கின்றது எனவே பொதுமக்கள் தாரளமாக நிதி உதவி செய்யுங்கள் என்றால் எப்படி உதவி செய்ய முன்வருவார்கள்?. ஆக தவ்ஹீது ஜமாஅத் சிலரது தவறான நபர்களின் ஆலோசனையின் பெயரில், தவறான வழியில் செயல்பட ஆரம்பித்துள்ளதையே இது காட்டுகின்றது. இன்று தலைமையில் மூலம் ஒளிபரப்பப்படும் நாடகம், நாளை தமிழகத்தில் உள்ள அணைத்து கிளைகளிலும் வீதிதோறும் நடத்தப்படலாம்!.


எனவே சமூகத்திற்கு எதிரான அனாச்சாரங்களுக்கு மார்க்க பிரசாரத்தை மக்களிடையே இதுபோன்று நாடக வடிவில் கொண்டு செல்வதை உடன் நிறுத்த வேண்டும்!. (இல்லை எனில்) இந்த நாடகத்தில் எந்த ஒழுக்க கேடும் இல்லை. மக்களின் நடவடிக்கையைத்தான் காட்சியாக்கி காட்டுகின்றோம் என்று சொல்ல வருவீர்கலேயானால், நாளடைவில் இக்காட்சிகளில் சிறு சிறு அனாச்சாரங்கள் தலை தூக்க ஆரம்பிக்கும். பின் அதுவே வழிகேட்டில் கொண்டு சென்று விடும் என்பதை மனதில் கொண்டு, இதுபோன்று அனாச்சாரங்களுக்கு எதிராக ஒரு அனாசாரத்தையே மக்களிடையே கொண்டு செல்வதை த,த.ஜவினர் உடன் நிறுத்த முன்வருவார்களா?. இதை மற்ற இயக்க மக்கள் கண்டிக்கும் முன், தவ்ஹீது சகோதரர்களே வன்மையாக கண்டிக்க வேண்டும்!.


இந்த நாடகத்தை ஒளிபரப்பாமல் தடுத்து நிறுத்த வேண்டும்!.அல்லாஹ் நாம் செய்த அணைத்து பாவங்களையும் இந்த புனிதரமளானில் மன்னித்து நம்மை நேர்வழியில் நடத்த துவாசெய்தவனாக.

Thanks to 
அதிரை முஜீப்
Please visit:
http://adiraimujeeb.blogspot.com/2011/08/to.html#more

No comments:

Post a Comment