தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஊரில் SUMITTERS TO GOD ALONE (கடவுளுக்கே சரணம்) என்ற இஸ்லாத்திற்கு எதிரான குழுவினர் உள்ளனர். ஆனால் அவர்கள் கொண்டுள்ளதோ முஸ்லிம் பெயர்கள். அவர்களுக்கு எதிராக அவ்வூர் ஜமாத் 19-08-09 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.
வஸ்ஸலாம்.
அன்புடன்
கேப்டன்.N.A.அமீர் அலி M.A.
http://intjonline.in/2115.do
- அவர்களுக்கு நிக்காஹ் தப்தர் கொடுப்பதில்லை.
- அவர்களுக்கு முஸ்லிம் கபர்ஸ்தானில் அடக்க அனுமதி இல்லை.
- கல்யாண வைபவங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை. அவர்களுடைய விழாவுக்கு போவதுமில்லை என்று அவர்களை விலக்கி வைத்தது.
- இவர்கள் அல்லாஹ்வை GOD என்பவர்கள்.
- குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லி அதில் 9 : 128 & 129 ஆகிய வசனங்களை நீக்கியுள்ளார்கள்.
- நபிகள் நாயகத்தையும் ஹதீஸையும் முழுமையாக மறுத்துவிட்டு ரஷாத் கலிபாவை இறுதித்தூதராக ஏற்பவர்கள் ( 7 :158 , 33 : 40 ஐ பார்க்கட்டும் ) .
- கலிமாவில் “லாயிலாஹா இல்லல்லாஹ்” மட்டும் தான் சொல்வார்கள் (முகமது(ஸல்) அதில் வருவதால்).
- ஐந்து வேளையும் அல்ஹம்து மட்டும் ஓதி 2 ரக்அத்கள் தான் தொழுவார்கள், முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர் அதில் வருவதால் அத்தஹியாத் ஓதமாட்டார்கள்.
- ஹஜ் நான்கில் எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம் என்பார்கள்.
- பணம் கிடைத்த அன்றே 2 ½ சதம் ஜக்காத் கொடுத்துவிட வேண்டும் என்பார்கள்.
இவர்கள் இஸ்லாமிய அடிப்படைகளைத் தகர்த்தவர்கள். ஸவூதி ராபிதா, தேவ்பந்த், பாக்கியாத் ஆகிய அமைப்புகள் இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஃபத்வாக் கொடுத்துள்ளனர். • இவர்களில் ஒருவர் மனைவியுடன் உடலுறவு கொண்டபின்பும் குளிக்காமல் தொழுகையை நிறைவேற்றலாம் என கூறினார்.
• இன்னொருவர் எல்லா வேதங்களையும், யஜூர், அதர்வன உள்பட குத்பாவில் படிக்க வேண்டுமென்றார்.
• விநாயகரும் நமக்குக் கடவுளே என்றார் இன்னொருவர்.
• இப்படி ஆளுக்காள் பத்வா கொடுத்தார்கள்.
• ஒருவர் நானும் ஒரு நபியே என்று அறிவிப்புச்செய்தார்.
இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை அவர்களே ஆராய்ந்து பார்க்கட்டும். ஜமாத்துல் உலமா சபை இதனைத் தமிழகமெங்கும் ஜும்ஆக்களில் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
வஸ்ஸலாம்.
அன்புடன்
கேப்டன்.N.A.அமீர் அலி M.A.
http://intjonline.in/2115.do
No comments:
Post a Comment