ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Thursday, October 27, 2011

யாருடைய தளத்தில் ஆபாசம் அதிகம் .?

செங்கிஸ்கானும் வாக்கெடுப்புக்கு விடவேண்டும்


பொய்யன்டிஜே தளத்தில் ஆபாசக் கருத்துக்கள் அதிகம் வெளியாகிறது என்று புகார் வந்ததைத் தொடர்ந்து பொய்யன்டிஜே தளத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடிவிடலாமா என மக்களிடம் கருத்துக் கேட்டு இறைவனின் மாபெறும் கிருபையால் ஏகோபித்த மக்களின் ஆதரவு இந்தத் தளத்திற்கு கிடைத்து விட்டது,. நிறைய சகோதரர்கள் தங்கள் சிறப்பான கருத்துக்களையும் தந்து ஊக்கப்படுத்தியதற்கும் நாம் நன்றி சொல்லிக் கொள்கிறோம். 

ஆனால் உண்மையான ஆபாசத்தளத்தின் அதிபதியாக இருக்கும் அண்ணன் செங்கிஸ்கானும் தன்னுடைய இணையதளத்தை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பதை பகிரங்க வாக்கெடுப்புக்கு விட வேண்டும். அதற்கு திராணியில்லாமல் வேறு ஏதும் கதை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதுபோல நாம் பல நாட்களாக செங்கிஸ்கானுக்கு ஒரு சவாலை விடுத்து வருகின்றோம். அதாவது சென்ற ரமலான் மாதத்தில் அப்பாவி பொதுமக்களிடம் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பித்ரா காசுகளை வசூல் செய்து அதை அப்படியே அமுக்கிக் கொண்டார்கள் என நாம் பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறோம்.

ஆனால் இதை மறைப்பதற்காக அந்த மானங்கெட்டவர்கள் வேறு எதைப்பற்றியெல்லாமோ பேசுகிறார்களே தவிர இதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த அயோக்கியர்களை நோக்கி நாம் மீண்டும் பகிரங்கமான சவாலை விடுக்கிறோம். வரும் வாரம் உங்களது பத்திரிக்கையில் பித்ரா கணக்கை மாவட்ட வாரியாக தெளிவாக வெளியிடத் தயாரா?

இதற்கு பதில்சொல்லி விட்டு மற்ற விசயங்களுக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்பது தான் நமது எண்ணம்.

http://poyyantj.blogspot.com/2011/10/blog-post_25.html


No comments:

Post a Comment