ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, October 29, 2011

உள்ளாட்சி தேர்தல் வெற்றி!


உள்ளாட்சி தேர்தலில் மமகவெற்றி பெற்ற விவரங்கள்.

இன்ஷா அல்லாஹ் வெற்றி செய்திகள் தொடரும்...
என்று தலைப்பிட்டுத.மு.மு.க இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் கீழே குறிபிட்டுள்ள இந்த இரண்டு வேட்பாளர்களும் உண்மையில் இவர்களின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர்கள் அல்ல!. மாறாக கட்சி, இயக்கம் வேறுபாடுகளை மறந்து
மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சகோதரி ரபீக்கா அவர்களும், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சகோதரி ஏ.எச். சவ்தா அவர்களும்முஹல்லாவின் (சங்கம்) சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களே ஆவர்கள்!.
ஆனால், த.மு.மு.க இவர்களின் இந்த வெற்றியை தன் இணையத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறி தவறான செய்தியை வெளியிட்டது ஏன்?.
இதனால் த.மு.மு.க வின் இணையத்தில் வெளிவந்துள்ள மற்ற வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தற்போது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் இந்த பட்டியலை சரிபார்த்து கொள்ளவும்.
ஆனால் அதிராம்பட்டினத்தில் நான்கு வார்டுகளில்(3,10,12,15) ம.ம.க போட்டியிட்டு மூன்று வார்டுகளில் டெபாசிட்டை இழந்ததுதான் உண்மை நிலை!. ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.



தவறான அறிவிப்பு: http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1473:2011-10-21-05-40-30&catid=96:arasial&Itemid=186


ரபீக்கா
17வது வார்டு
அதிராம்பட்டினம் பேரூராட்சி
தஞ்சை தெற்கு மாவட்டம்


ஏ.எச். சவ்தா
19வது வார்டு
அதிராம்பட்டினம் பேரூராட்சி
தஞ்சை தெற்கு மாவட்டம்




உண்மை நிலவரம்:
http://adiraitiyawest.blogspot.com/2011/10/17_9895.html

http://adiraixpress.blogspot.com/2011/10/me-17.html


http://adiraixpress.blogspot.com/2011/10/me-19_21.html

No comments:

Post a Comment