ஆதாரம் அம்பலம்!
அன்பார்ந்த சகோதரர்களே ! கடந்த இரண்டு ஆண்டுகளாக பொய்யன் தளத்தின் மூலமாக பல்வேறு அவதூறுகளையும் ,வசவுகளையும் அள்ளித் தெளித்தனர். அதற்க்கு பதிலளிக்க நாம் செங்கிஸ் கான் ஆன்லைன் எனும் தளத்தை துவங்கி கண்ணியமான முறையில் பதில் அளித்ததோடு அறிவுப்பூர்வமாக கேள்விகளை அவர்களை எழுப்பினோம்! மேலும் முஹைமின், முகவை அப்பாஸ் போன்றோர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் ! கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட்டு கேடு கெட்ட முறையில் கேள்வி கேட்டவர்களின் குடும்பத்தை இழுத்து கேவலப் படுத்தினர்.
யாரிடத்தில் பதில் இல்லையோ அவர்களிடத்தில் இருந்து வசவுகள் மட்டுமே வரும் இது கீழ்த் தரமானவர்களின் குணமாகும். ஆரம்பத்தில் அண்ணன் தளத்தில் இருந்து லிங்க் கொடுத்து விட்டு இந்த வசவுகள் வரம்பு மீறி இன்று அவர்களின் தொண்டர்களே காறித் துப்பி கண்டனம் செய்தவுடன் எங்களுக்கும் அந்த இணைய தளத்திற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விடுகிறார்கள்.
குரான் ஹதிஸ் பின் பற்றுகிறோம் எனும் இவர்களின் கோர முகத்தை , நாம் பிரிந்த அன்றே கண்டோம்! பாக்கர் என்ற மனிதர் மேல் இவர்கள் பரப்பிய கண்ணியமற்ற விமர்சனகளையும் ,அவரின் மானத்தோடு விளையாடியதையும் கண்டு அநீதி இழைக்கப் பட்ட அவரோடு துணை நின்றதற்காக இவர்கள் கேட்ட முதல் கேள்வியே ' உன் பொண்டாட்டியை பாக்கரோடு பஸ்ஸில் அனுப்புவாயா? என்பது தான் ! கேட்டவர்கள் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் அல்ல! மாநில நிர்வாகிகள்! இதை கேட்ட நாம் அதிர்ச்சி யால் உறைந்து விட்டோம்! இவ்வளவு கேடு கெட்டவர்கள் உடனா நாம் இவ்வளவு நாள் பணியாற்றினோம்? தவ்ஹீத் போர்வைக்குள் இவ்வளவு தரங்கெட்டவர்களா? என இடிந்து நின்றோம்! தொடர்ந்து அண்ணனின் அடி வருடிகள் வெளி நாட்டில் இருந்தும் அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அழைத்து மிக மோசமான வார்த்தைகளால் குடும்பத்தினரை அர்ச்சித்தனர்.
நம்மை மட்டும் அல்லாமல் நமக்கு ஆதரவளித்து நிர்வாகத்திற்கு வந்த நல்லவர்களையும் இது போன்று கேவலமான் வார்த்தைகளால் அர்ச்சித்த உடன் அவர்கள் பொறுப்புக்களை விட்டு விரண்டோடிய சம்பவங்களும் நடந்தேறின. ஆனால் இது அத்தனையும் அண்ணனின் ஆசிர்வாதத்தோடும் , ஆதரவோடும் தான் நடந்துள்ளது.
உதாரணதிற்கு நான் உம்ராஹ் சென்ற போது என் பெயரில் ஒரு கடிதத்தை வெளியிட்டு அவதூறு பரப்பினர். ' என் வீட்டுக்கு பாக்கர் நான் இல்லாத சமயத்தில் வருவதை நான் விரும்பவில்லை' அதில் எனக்கும் பாக்கருக்கும் பிரச்னை என்றும் என்னை இயக்கத்தை விட்டு நீக்க பாக்கர் சதி செய்வதாகவும் , என் கை எழுத்தை போலியாகப் போட்டு மிகவும் கேவலமான ஒரு கடிதத்தை பொய்யன் தளத்தில் வெளியிட்டதோடு தமிழகம் முழுதும் அதை பிரிண்ட் எடுத்தும் பரப்பினர்.
நான் எனது தளத்தில் மறுப்பு வெளியிட்டு இதை செய்தவர்களை கஹ்பாவில் நின்று கை ஏந்தி அல்லாஹ்விடம் 'யா அல்லாஹ் இந்த அவதூறு பரப்பியவர்களை நீ பார்த்துக் கொள்' என்று விட்டு விட்டேன்! என்னுடைய மறுப்பை பொய்யாக்க என்னுடைய இணையதளத்தையே போல் ஒன்றை உருவாக்கி இது தான் எனது உண்மையான தளம் செங்கிஸ் கான் ஆன்லைன் இல் வருவதை நம்ப வேண்டாம் என்றார்கள். கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாள் நிற்கும் இன்று அவர்களாலேய அவர்கள் செருப்படி வாங்காத குறையாய் கேவலப் பட்டு நிற்கிறது பொய்யன் தளம். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் இதில் அதிர்ச்சி என்ன வென்றால் அந்தக் கடிதம் அண்ணனின் நேரடி மேற்பார்வையில் உருவானது என்பதை இலங்கை சகோதரர் ஒருவர் அப்போதே நமக்கு ஆதாரத்தோடு அனுப்பி வைத்தார். இந்தக் கடிதம் உங்களுக்கு எதிராக தயாரிக்கப் பட்டு பொய்யன் தளத்தை நடத்துபவரால் அனுப்பப் பட்டு அதில் சில வாசகங்கள் அண்ணனால் சேர்க்கப் பட்டு அனுப்பப் பட்டுள்ளது என்பதை நமக்கு இ மெயில் மூலம் அனுப்பி உள்ளார். இதை அவர்கள் தளத்திலும் அபு யூசுப் அண்ணனுக்கு ஒரு கடிதம் என வெளியிட்டுள்ள செய்தியில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதை கீழே உள்ள மஞ்சள் நிற வாசகங்களில் காணலாம்.
சில நேரங்களில் நான் கேட்டதற்கு இணங்க ஈமெயில் வழியாக எனக்கு சில பாயிண்டுகளைத் தந்தீர்கள். உங்களைப் பற்றி எழுதும் அவதூறு விசயங்களுக்கும் உங்கள்சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் உங்கள் கருத்தைக் கேட்டுத் தான் பதிலளிக்க வேண்டும். கற்பனையில் எழுதினால் அது பொய்யாகப் போய்விடும்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னால் செங்கிஸ்கான் சம்பந்தமாக நான் வெளியிட்ட ஒரு கடிதத்தில் உண்மைத் தன்மை இல்லை என அதை நீங்கள் நீக்கச் சொன்னீர்கள். ஆனால் அது என் பார்வையில் அது சரியானதாகத் தோன்றியதால் அதை நான் நீக்க முடியாது என்று மறுத்தேன். நம் ஜமாத்தின் கிளையில் நிர்வாகியாக இருக்கும்செங்கிஸ்கானின் அண்ணனும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதால் அதை நீக்கச்சொன்னீர்கள்.
கடிதம் சரி பார்க்க அனுப்பப் பட்ட போது ஒரு மார்க்க அறிஞரான பி.ஜே, இது மார்க்க அடிப்படையில் தவறு என கண்டிக்காமல் அந்த அவதூறுகளை அங்கீகரித்து ஆசிவ்தித்து அதில் சில வாசகங்களை சேர்த்து அனுப்பி வைத்து விட்டு என்னுடைய, என் மனைவியுடைய
மானத்தோடு விளையாடி விட்டு இதை சேப்பாக்கம் கிளை நிர்வாகியான என் அண்ணன் கேட்டவுடன் நீக்க சொல்வதால் என்ன பயன்? இதில் இருந்தே பி.ஜே.என்பவர் தனக்கு பிடிக்காத யார் மேலும் எத்தகைய அவதூறையும் சுமத்தக் கூடியவர் என்பதற்கு இந்தக் கடிதங்களே ஆதாரமாகும்!
No comments:
Post a Comment