ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Thursday, October 27, 2011

பணநாயகத்துக்கு மத்தியில் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதா?


  

ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டதால், இந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழக மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. இதன்மூலம் ஒவ்வொரு கட்சியின் சொந்த பலம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது என பல பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித் தீர்க்கின்றன.

"உதிரி கட்சிகள்" "சிறிய கட்சிகள்" என்றெல்லாம் சில ஆதிக்க ஊடகங்கள் விமர்சிக்கின்றன. அவர்களுக்கெல்லாம் செல்வாக்கே இல்லை என்பது போலவும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மட்டுமே செல்வாக்கு இருப்பது போலவும் குதிக்கிறார்கள்.

போன திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக அனைத்திலும் படுதோல்விகளை சந்தித்தது. திருமங்கலத்தில் பலத்த பின்னடைவை சந்தித்தது. பென்னாகரத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப் பட்டு டெபாஸிட்டை இழந்தது. இளையான்குடி உள்ளிட்ட ஐந்து சட்டமன்றங்களுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடந்த போது களத்தை எதிர்கொள்ள திராணியி ல்லாமல் அதிமுக தேர்தலையே புறக்கணித்தது.

அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்த வாக்குகளைப் பெற்றாலும் துணிச்ச லோடு களத்தை சந்தித்தார்கள். அப்படி மோசமான நிலையில் இருந்த அதிமுக தான் இப்போது உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று அதிகார கூடுதல் பலத்தோடு, பணத்தோடு தனித்து வெற்றிபெற்றிருக்கிறது. அவசரகார விமர்சகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதன்படி இப்போது கட்சிகள் பெற்றிருக்கும் வெற்றிகளை வைத்து குறிப்பாக திமுக, அதிமுக வைத் தவிர்த்து மற்ற கட்சிகள் பெற்ற வெற்றி தோல்விகளை வைத்து அவற்றின் வலிமையை எடைபோடக் கூடாது.

இதில் பெற்ற வெற்றிகளை அதிமுகவுக்கு தனி செல்வாக்கு உள்ளது என்றும் தீர்மானித்து விடக்கூடாது. திமுகவின் மீதான மக்களின் கோபம் இன்னும் தீரவில்லை என்பதால் திமுகவின் கதை முடிந்ததாகவும் கருதிவிடக் கூடாது.

காரணம், போன தேர்தலை விட இத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத் தனர். சில இடங்களில் சுயேட்சை களும் தங்கள் கௌரவத்தை உள்ளூரில் காப்பாற்றிக் கொள்ள பணத்தை வாரியிறைத்தார்கள்.

இதனால் கம்யூனிஸ்ட் கட்சி கள், மதிமுக, மமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிகளை சில ஓட்டுகளில் நழுவவிட்டுள்ளனர். பல இடங்களில் களத்திலிருந்தே ஓரங்கட்டப்பட்டார்கள் எனலாம்.

தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு மத்தியில் நடைபெற்ற பண விநியோகத்தைத் தடுக்க எள்முனையளவும் முயற்சி எடுக்க வில்லை.

இந்தத் தேர்தலில் திறமையும், நேர்மையும், மக்கள் நல சிந்தனைகளும் நிறைந்த பல வேட்பாளர்கள் அடிப்படைத் தேவைகளுக்கு போதிய செலவு செய்ய முடியாத காரணத்தாலும், எதிர்தரப்பினர் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை நடத்தியதாலும் அநியாயமாக தோல்விய டைந்துள்ளனர்.

இது ஆரோக்கியமான ஜனநாயகத் துக்கும், பொது வாழ்வுக்கும் நல்லதல்ல. வாக்காளர்கள் ஓட்டுக் காக கொடுக்கும் பணத்தை வாங்கக்கூடாது என்ற பரப்புரை தேர்தல் ஆணையத்தால் தேர்தலு க்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நடத்தப்பட வேண்டும்.
இப்போது ஓட்டுப்போட வலியு றுத்தி விளம்பரங்கள் செய்வ துபோல, அதைவிட இரு மடங்கு அதிக வேகத்தோடும், திட்டங்க ளோடும் அதற்கான பரப்புரை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூக சேவை அமைப்பு களை இதில் ஈடுபடுத்த வேண்டும். சமுதாயத் தலைவர்கள், மத அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவுஜீவிகள், கலை இலக்கிய பிரமுகர்கள் என பலரையும் இதில் ஈடுபடுத்தினால் ஓரளவாவது இந்த ஜனநாயகத் தீமையை கட்டுப்படுத்த முடியும்.

இல்லையெனில் லட்சாதிபதிகளும், ரவுடிகளும் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வர முடியும் என்ற நிலை நிரந்தரமாக ஏற்பட்டு விடக்கூடும்.

அப்படி ஒரு நிலை உருவானால் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் தங்களது நோக்கத்தை இழந்து, எகிப்து, லிபியா, துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் புரட்சிக்கே அது வழிவகுக்கும்.

www.tmmk.in

No comments:

Post a Comment