மதிப்பிற்குறிய மௌலவி பீஜே அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களது இணையத் தளத்தில் “உங்கள் கருத்து” ப் பகுதியில் களுத்துறையைச் சேர்ந்தசகோதரர் பர்ஹான் என்பவரின் கேள்விக்கு அளித்த பதிலை வாசித்தேன்.
http://onlinepj.com/YFeedback/
சூனியம் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்கும் தங்களது நிலைப்பாட்டைப் பற்றி நான் விவாதிக்க எனது இணையதளத்தில் தாங்களை அழைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நீங்கள் “இப்போது அவர் மிக மிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு இனிமேல் தஃவா செய்யக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே விவாத அழைப்பு” என்று பதில் அளித்துள்ளீர்கள்.
அவர் குறிப்பிட்டதைக் கொஞ்சம் நீங்கள் உறுதிப்படுத்தியபின் மேற்கூறியவாறு  சொல்லியிருந்தால் குறுற்தகடுகளை மறைக்கத்தான் இந்த விவாத அழைப்பு என்ற குற்றச்சாட்டு உண்மையெனலாம். நான் தங்களுடன் எப்பொழுதும் களந்துரையாடுவதையும் கருத்துப்பறிமாற்றம் செய்வதையுமே விரும்பியுள்ளேன். தங்களுக்கு எங்கேயும் விவாத அழைப்புக்கள் விடுத்ததில்லையே. என்னைப் பற்றிய குறுந்துகடுகளை தாங்கள் வைத்திருப்பதனாலோ அல்லது வேறு காரணங்களிற்காகவோ இந்த நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. அதற்கு முன்னரே பல உரைகளிலும் எழுத்துக்களிலும் நான் அவ்வாறுதான் நடந்துள்ளேன்.
“ஏற்கனவே முஜாஹிதிடம் விவாதம் செய்வது குறித்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் அவர் அதற்கு ஒத்துவரவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நான் நல்லதொரு கலந்துரையாடலுக்குத் தயாராகவே உள்ளேன் என்று ஒரு மடலை எஸ் எல் டி ஜேயிற்கு எழுதியதும் அது டி என் டி ஜேயிற்கு கிடைத்ததும் தாங்கள் அறிந்தேயிருப்பீர்கள். பின்வரும் லின்கில் அந்தக் கடிதம் உள்ளது.
“முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது”என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ஓடியோப் பதிவை தாங்கள் கேட்டதால்தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அதைக் கேட்பவர்கள் அந்த முடிவுக்குத்தான் வருவார்கள் என்றும் எழுதியுள்ளீர்கள்.
நான் ஒரு இணைய அரட்டையின்போது மிகமோசமான முறையில் ஒரு அழைப்பாளனுக்குத் தகாத முறையில் பேசினேன் என்பதை உலகறிய நான் ஏற்கனவேயே ஏற்றுக்கொண்டுவிட்டேன்.அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன் கேட்டுக்கொண்டுமிருக்கிறேன். அப்படியொரு அரட்டை நடந்ததை எண்ணிப் பார்க்கும் நேரமெல்லாம் நான் மனம் வருந்தி தவ்பா செய்கிறேன். ஆனால் பதிவுசெய்யப்பட்ட அந்த அரட்டை சம்பந்தமான குறுந்தகடுகளை நான் தஃவா செய்யக் கூடாது என்பதாக நிபந்தனையிட்டு தடுத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளதுதான் ஆச்சரியமாக உள்ளது. மரணம் வரை எனது பிரச்சாரத்தை எந்தக் குறுந்தகடும் தடுக்காது இன்சா அல்லாஹ்.
அதே நேரம் அந்த அரட்டையை டீ என் டீ ஜேயின் இலங்கைக் கிளை முன்னால் தலைவர் ரஸ்மிதான் தன்னை ஒரு பெண்ணாக “பஸீரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டு செய்தார்.(ஆனால் தற்பொழுது அந்தச் சகோதரர் அவ்வாறு தான் செய்ததை எண்ணி மனம் வருந்துகிறார்). அதனால் அவரைப் பற்றி தவறாக இங்கே சொல்ல வரவில்லை. அவர் அவளாக எழுத்திலும் நான் நானாக எனது குரலிலும்தான் அந்த அரட்டை நடந்தது. அதில் தான் எப்படி அந்த அரட்டை அமைய வேண்டுமென்று விரும்பினாரோ அதற்கேற்ப கேள்விகளைக் கேட்டார்.சைத்தானின் மாய வலையில் சிக்கியிருந்த நான் மோசமாக அதற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். அதைப் பதிவு செய்து டி என் டி ஜே இலங்கைக் கிளையினர் மூலம் தஃவா செய்யக் கூடாது என்று ஒப்பந்தம் எடுக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுக்கப்பட்ட வீடியோவும் அரட்டை ஓடியோவும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அந்தப்பதிவைத்தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதும் முதல் விவாதமாக அது அமைய வேண்டும் என்று சொல்வதும் எந்த வகையிலும் மார்க்கம் அனுமதிக்கும் முறையல்ல.ஒருவேளை நான் அதுபொய்யான பதிவு என்று சொன்னால் நீங்கள் சொல்வதில் ஒரு ஞாயம் உள்ளது என்று சொல்லலாம். ஆனால் நான் ஏற்றுக்கொண்ட ஒரு தவறைமறுபடி விவாதிக்க வேண்டும் என்று சொல்வது முறையல்ல.
இதில் இன்னும் பல விடயங்கள் பேசப்பட வேண்டியுள்ளன. ஆனாலும் ஒருபொழுதும் நான்பாவமன்னிப்புக் கேட்டு தவிர்ந்துகொண்ட ஒன்றை பாதுகாத்து வைத்துக் கொண்டு என்னை அச்சமுற வைக்கலாம் என்ற தப்பான எண்ணங்கள் இருந்தால் அதை இன்றோடு தவிர்ந்துகொள்ளுங்கள். டிவீடிகளாக அரட்டையை மாற்றி டி என் டி ஜேயின் இளவச விநியோகங்களில் ஒன்றாக இதைச் செய்தாலும் என்னை அவமானப்படுத்தலாம் ஆனால் அது மாத்திரமல்லாமல் ஒரு முஸ்லிம் தன் தவறை ஏற்றுக்கொண்ட பின்னர் அவரது மானத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது உங்கள் தகுதிக்கும் பிரச்சாரத்திற்கும் உகந்ததல்ல. தாங்களே ஒரு முஸ்லிமுடைய மானம் சம்பந்தமாக தனித்தலைப்பில் உரை கூட நிகழ்த்தியுள்ளீர்கள்.“தவறாக நடக்கும் போலிகளைத்தான் அடையாளப்படுத்துகிறோம்” என்று பதில் சொல்லிவிடாதீர்கள். அவ்வாறே வைத்துக்கொண்டாலும் தவறை உணர்ந்து நான் 6 மாதகாலம்மௌனமாக இருந்து அமைதிகாத்த பின்னரே மறுபடி பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். கொஞ்சம் சிந்தியுங்கள். தயவுசெய்து இந்த வழிமுறை நல்லதல்ல. தங்களின் மீது நான் மிகுந்த மரியாதையுடையவன் என்பதனால் இந்த மடலை தங்களுக்கு வரைந்துள்ளேன். பதிலை எதிர்பார்க்கிறேன்.
No comments:
Post a Comment