நேசம் என்பது வெறும் பாராட்டுவது மட்டும் அல்ல.. நம் நேசத்திற்கு உரியவர்கள் ஏதாவது தவறு செய்கையில் அதை சுட்டிக் காட்டுவதும் நேசமே . நான் பார்த்த மற்றும் படித்தவைகளை இந்த வலைத் தளத்தில் பதிவு செய்கிறேன். அவ்வளவே..
ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!
Wednesday, October 27, 2010
19 அறிவில்லா(பொய்யர்) அமைப்புகளுக்கான பதில்
Subject: [MMS] 19 அறிவில்லா(பொய்யர்) அமைப்புகளுக்கான பதில்
To: anaithuthowheethsagotharargal@googlegroups.com, muslimmails@googlegroups.com, tmpolitics@googlegroups.com, "tmb" <tamilmuslimbrothers@googlegroups.com>
Date: Monday, 25 October, 2010, 5:47 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல்-அமீன் காலனி கிளை சார்பாக வைக்கப்பட்டுள்ள “19 அறிவில்லா அமைப்பு“களுக்கான பதில், குர்ஆன் வசனம் மட்டுமே.
திருவிடைச்சேரி சம்பவத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது நாடறிந்த உண்மை. இது ஒரு தனிநபரின் கோபத்தினால் ஏற்பட்ட நிகழ்வு. இது போன்ற சம்பவங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபடாது என்பதெல்லாம் மக்களுக்கு மிகத்தெளிவான விஷயம்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எந்த மக்களை இவர்கள் தூண்டிவிட நினைக்கிறார்களோ அந்த மக்கள் கொள்கையில் தவ்ஹீத்வாதிகளாக இல்லாவிட்டாலும் நம்பிக்கை, நேர்மை, ஒழுக்கத்தில் எல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் முதன்மையானது என்பதை தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள்.
அதனால் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தவுடன் இட ஒதுக்கீடு கோரிக்கைகாக பல லட்சகணக்கில் தீவுத்திடலில் கூடினார்கள்.
மக்கள் நபியவர்களிடம் வந்து அனைத்து மனிதர்களும் உங்களுக்கெதிராக ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று சொன்ன நேரத்தில் , என்ன நடந்தது என்பதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்,
“ மக்கள் உங்களுக்கெதிராக திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் ! என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன் என்று அவர்கள் கூறினர் “.(3:173)
ஆகவே இவர்கள் அத்தனை பேரும், 19 இயக்கம் அல்ல 19 லட்சம் இயக்கம் ஒன்று சேர்ந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
“தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள்-ஆனால் ஏக இறைவனை மறுப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்”. அல்குர்ஆன் 9:32
இந்த பொய்யர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டத்தின் சார்பாக நிஜம்- நடந்தது என்ன? என்ற தலைப்பில், 10,000 நோட்டீஸ் அச்சடிக்கபட்டு மக்களின் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment