ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, October 29, 2010

தவ்ஹீத் பள்ளி இமாமை தாக்கினர்(TNTJ.Net)

Subject:   [MMS] SDPI மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினரின் வெறியாட்டம்
To: muslimmails@googlegroups.com
Date: Wednesday, 27 October, 2010, 5:45 PM

 

தவ்ஹீத் பள்ளி இமாமை தாக்கினர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் SDPI  மற் றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினர் திருவிடைச்சேரி சம்பவத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்புபடுத்தி சுவரொட்டிகள் நகர் முலுவதும் ஒட்டியிருந்தனர்.
இதை தொடர்ந்து நமது ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வண்ணம் ஒட்டப்பட்ட செய்தி தவறு என்பதையும் அவர்களின் உண்மை முகத்தையும் விளக்கி சுவரொட்டிகளை ஒட்டினர்.
இதை தாங்கிக்கொள்ள முடியாத SDPI மற் றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த சமூக வீரோதிகள்  நமது சகோதரர்கள் ஒட்டிய சுவோரொட்டியில் உள்ள கருத்துக்கள் மக்களை சென்றடையக் கூடாது என்ற எண்ணத்தில்  நமது ஜமாஅத் ஒட்டிய அனைத்து சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்தனர்.
பின்னர் கடந்த 21.10.2010 அன்று இரவு , உணர்வு விளம்பர சுவரொட்டியை ஒட்டச்சென்ற நமது ஜமாஅத்துடைய இமாம் அம்ஜத் அலி அவர்களை SDPI மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினர் எங்களுக்கு எதிராக நீதான் சுவரொட்டிகளை ஒட்டுகிறாயா என்று கூறி சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமுற்ற இமாம் நான்குனேரி அரசு மருத்துவமனைல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு SDPI மற் றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினர் இருவரை கைது செய்த காவல்துறையினர் மற்றும் சிலரை தேடிவருகின்றனர்.
Thanks : www.tntj.net

No comments:

Post a Comment