புதுவை  மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகருத்தூர் கிளை 
சேலம்
கோவை மாவட்டம் நூராபாத்(போத்தனூர்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் எக்மோரில் நேற்று (18-11-2010) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். மேலும் தென் சென்னை மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு மைலாப்பூரில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது குறிப்பிடதக்கது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில்  இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில்  முபாரக் பள்ளி முன்புள்ள பஜார் ரோட்டில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று (18-11-2010) நடைபெற்றது.வழக்கமாக நடைபெறும் ஈத்கா திடலில் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர் மழையின் காரணமாக தீடீர் என்று பஜார் ரோட்டில் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிகாலை 6.00 மணி முதலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சாரை சாரையாக வரத்தொடங்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட காரணத்தினால் முபாரக் பள்ளிவாசலின் நான்கு தளங்களும் நஜாஹ் நர்ஸரி வளாகம் முழுவதும் மற்றும் பஜார் முழுவதும் நிரம்பி வழிந்தனர்.
சரியாக 6.45 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர், சகோ. எஸ்.எஸ்.யு, ஸைபுல்லாஹ் ஹாஜாஅவர்கள் தொழுகை நடத்தி பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.























No comments:
Post a Comment