பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு
Source:
ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக் மாநில தலைவர் அல்ஜன்னத் ஜுலை 2010 இதழில் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு பி.ஜே பாராட்டுப்பத்திரம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தி இதோ
மேற்கண்ட செய்தியில் மார்க்க அறிவு இல்லாதவர்கள் பேச்சாளர்களாக தலையெடுத்ததால்தான் ஜாக்கில் குழப்பம் என கூறியுள்ளார். சிந்தனைவாதிகள் இங்கு சற்று சிந்திக்க கடமைப்படுள்ளனர்.
ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல் இங்கு பி.ஜே அழுவது எதற்காக ?
ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் மார்க்கத்தை ஆய்வு செய்பவர்கள் ஒதுக்கப்பட்டது தான் ஜாக்கில் குழப்பத்திற்கு காரணம் என்ற செய்தி மிகவும் உண்மையானது என்பதை நாம் அனைவரும் ஏற்றே ஆக வேண்டும்.
இதே குழப்பம் டி.என்.டி.ஜெ யிலும் மற்ற அமைப்புகளிலும் உள்ளது. பி.ஜே ஆய்வு செய்தால் சரியாக இருக்கும் என்று அவரும், அவரை கண் மூடிபின்பற்றுபவர்களும் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் மெளலவி அல்லாதவர்கள் மார்க்கத்தை ஆய்வு செய்து மக்களிடத்தில் சொல்லும் போது அதை தடுக்க முயற்சிப்பதுதான் குழப்பத்திற்கு உண்மையான காரணம். அதை ஜாக் பாராட்டுக் பத்திரம் மூலம் பி.ஜே மறைமுகமாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
இந்த காலத்திலும் பொது மக்கள் ஆய்வு செய்யவே கூடாது என்று மற்ற மெளலவிகளும் மதனிகளும் கூறி வருகின்றனர். பொது மக்களில் ஒருவர் மார்க்கத்தை அறிந்தவராக இருந்தாலும், ஆய்வு செய்வதற்கும் உரையாற்றுவதற்கும் அரபி மதராஸாக்களில் பட்டம் பெற்றவராகவே இருக்க வேண்டும் என்ற மாற்றார்களின் குரலை பி.ஜே வெளியிட்ட செய்தியிலும் காண முடிகிறது.
ஒருவர் மார்க்கத்தை பேச வேண்டும் என்றாலே பி.ஜே போல் மெளலவி வர்க்கமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இங்கு பி.ஜே மறைமுகமாக கூறுகிறார். இதற்காகத்தான் ஓநாய் அழுகிறதோ என சிந்திக்க வேண்டியுள்ளது.
ஜாக்கில் குழப்பம் மெளலவி அல்லாதவர்களால் தான் ஏற்பட்டது என்பதை கூறி உண்மையான குழப்பவாதிகள் மெளலவிகள்தான் என்பதை பி.ஜே இச்செய்தி மூலம் மறைக்க முற்படுகிறார். தனது அமைப்பிலும் இதுதான் பிரச்சினை என மறைமுகமாக இச்செய்தியில் கூறிவிட்டு, இதற்கு முன் பல காரணங்களை கூறி பேச்சாளர்களை நீக்கிவிட்டதை போல், தங்களது அமைப்பில் மீதி உள்ள மெளலவி அல்லாத பேச்சாளர்களை விரைவில் நீக்கி விடுவார் அல்லது மக்களை சந்திக்க விடாமல் தடுத்து விடுவார் என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
டி.என்.டி.ஜே இயக்கத்தில் தற்போது மெளலவி அல்லாதவர்களை ஒதுக்கினால் தான் தக்லீத் (கண்மூடித்தனமாக பின்பற்றுதல்) அடிப்படையில் இயக்கத்தை கொண்டு செல்ல முடியும் என முடிவு செய்து விட்டார்களோ என இச்செய்தி நம்மை சிந்திக்க தூண்டுகிறது.
மேலும் டி.என்.டி.ஜேயினர் தங்களது தவறான, குழப்பமான நிலைப்பாட்டை மூடி மறைப்பதற்கு ஜாக்கையும் வம்பிற்கு இழுத்துள்ளனர் என்பதை இச்செய்தி அறிவிக்கிறது. ஜாக் அமைப்பு இது நாள் வரை பிறையை பார்க்க வேண்டாம் என கூறவே இல்லை. பி.ஜே உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலைபாட்டில் இருந்து, அவராலேயே செயல்படுத்த முடியாமல் தோல்வியடைந்த தத்தமது பகுதி என்ற குழப்பமான நிலைபாட்டிற்கு (ஆரம்பத்தில் தாம்பரத்தில் பிறை பார்த்தது செங்கல்பட்டுக்கு பொருந்தாது என்று சொன்னவர் இப்பொழுது தமிழகம் முழவதும் ஒரே பிறை என பல்டி அடித்துவிட்டார்) சென்றபோது கூட ஜாக் எங்கிருந்தாவது பிறை தென்பட்ட செய்தி கிடைத்தாலும் அதை வைத்து மாதத்தை ஆரம்பிக்கலாம் என்ற பழைய நிலைப்பாட்டில் தான் இருந்தது. அது கூட பிறையை கண்ணால் பார்க்கும் அடிப்படைதான்.
அதன் பின் கணக்கின் மூலம் மாதத்தை துவங்கும் அடிப்படைக்கு ஆதரவு தெரிவித்து ஜாக் மாநில தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் பல செய்திகளை வெளியிட்டதோடு, பல இடங்களில் இதற்கு ஆதரவாக உரையாற்றி இருக்கிறார். மேலும் பிற ஜமாஅத்துகளோடு விவாதித்தும் இருக்கிறார். அதில் பிறையை அடிப்படையாக கொள்ள தேவையில்லை என அவர் எங்கும் பேசவில்லை. மாறாக கணக்கின் அடிப்படையில், பிறைகளும் நமது தேதிகளும் சரியாக இருக்க வேண்டும் என்பதை தான் கணக்கு என அவர் கூறிவந்தார்.
பிறைகளும் நமது தேதிகளும் ஒன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலைபாட்டிற்கு தற்போது அவர் மீண்டும் திரும்பியுள்ளார். தற்போது டி.என்.டி.ஜே வினர் ஜாக்குடைய பழைய நிலைப்பாடான வெளியூர்களில் இருந்து வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து பிறையை தீர்மானிக்கலாம் என்ற நிலைபாட்டிற்கு வந்து விட்டார்கள் என்பது தான் உண்மை. அவர்களின் ஏகத்துவ இதழே அதற்கு சான்று.
மேலும் டி.என்.டி.ஜே வினர் தான் தற்போது ஜாக்குடைய நிலைபாட்டிற்கு வந்துள்ளார்கள். ஆனால் டி.என்.டி.ஜே வினரோ ஜாக் நிலைபாட்டை மாற்றி விட்டதாக அறிவித்து, தங்களுடைய நிலைபாட்டை ஏற்றுக்கொண்டதாக கூறி ஜாக் மாநில தலைவரை பாராட்டுவது போல் செய்தி வெளியிட்டிருப்பது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை போல் இருக்கிறது.
அல்ஜன்னத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது போல் ஜாக் மாநில தலைவர் கணிப்பு(guess) என்னும் நிலைபாட்டில் இருந்ததில்லை. அவர் சொல்லிக் கொண்டிருந்ததும் கணக்கு தானே தவிர கணிப்பு அல்ல என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பி.ஜே கணக்கு என கூறாமல் வேண்டுமென்றே கணிப்பு என வார்த்தையை மாற்றிக் கூறுவது கூட ஒரு பித்தலாட்டம் தான்.
வார்த்தை ஜாலத்தை பி.ஜே பயன்படுத்துவார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. சிறிது காலம் சென்றதும் தற்போது ஜாக் மாநில தலைவரை பாராட்டுவதைப்போல் நாடகமாடி தன்னுடைய தவறான நிலைபாட்டை மாற்றியது போல் மீண்டும் பிறையில் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்போது நான் கணக்கை மறுக்கவில்லை, நாங்கள் கணிப்பு என்னும் உத்தேசமாக கூறுவதைத்தான் தவறு என்று கூறினோம் என்பதற்காகத்தான் தற்போதிருந்தே கணிப்பு என பதிந்து வருகிறார். எனவே கணிப்பு என்ற வார்த்தையை மாற்றி கணக்கு என பி.ஜே திருத்தம் செய்ய வேண்டும்.
மேலும் இதன் மூலம் டி.என்.டி.ஜே யையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது.
தலைப்பு:-
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?
நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.
நமது விவாத அழைப்பை பி.ஜே அவர்கள் ஏற்று வெளியிட்ட பதில் உங்கள் பார்வைக்கு
பிறை விவாத சவடால்
பிறை விவாத சவடால்
ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர்.
அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு திரிவதால் அது குறித்து நமது பதிலை இங்கே பதிவு செய்கிறோம்.
அவர்கள் விவாத அழைப்பில் இப்படி கூறப்பட்டுள்ளது.
தலைப்பு:-
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?
ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர்.
அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு திரிவதால் அது குறித்து நமது பதிலை இங்கே பதிவு செய்கிறோம்.
அவர்கள் விவாத அழைப்பில் இப்படி கூறப்பட்டுள்ளது.
தலைப்பு:-
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?
நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.
இதில் உள்ள அபத்தத்தை நாம் முதலில் சுட்டிக் காட்டுக்கிறோம்.
ஒரு இயக்கத்துடன் விவாதிப்பது என்றால் தலைப்பு பற்றி இரு சாராரும் பேசிய பிறகு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இரண்டு தலைப்புகளை அவர்களாகக் குறிப்பிட்ட மடமையை பாருங்கள்
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா என்பது ஒரு தலைப்பு. உலகத்தில் எந்த முஸ்லிமாவது குர்ஆனை நிராகரிக்கலாம் என்று கூறுவானா? குர்ஆனை நிராகரிக்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறினால் அது பற்றி விவாதிக்க அழைப்பு விடலாம்.
குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் உள்ளதாக புளுகும் மடையர்கள் இவர்கள் என்பது தான் நமது நிலைபாடு.
குர்ஆனை நிராகரிக்கக் கூடாது என்பது தான் நமது நிலை. ஒரு வேளை இவர்களின் நிலை குர்ஆனை நிராகரிக்கலாம் என்பதாக இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம். நாங்கள் காபிர்களாகி விட்டோம் என்று அவர்கள் அறிவித்து விட்டு குர்ஆனை நிராகரிக்கிறோம் என்று கூறுவார்களானால் இது பற்றி அவர்களுடன் விவாதிக்க முடியும்.
பிறை சம்மந்தமாக விவாதிக்க வேண்டுமானால் அது குறித்து அனைத்து கோணங்களையும் உள்ளடக்கிய வகையிலும் இது வரை அவர்கள் உளறிய அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் வகையிலும் தலைப்பு அமைக்கப்பட வேண்டும். அது ஒப்பந்தத்தின்ல் போது தான் தீர்மானிக்கப்பட வேண்டும்
மேலும் பிறை மட்டுமின்றி அதை விட பாரதூரமான கொள்கை வேறுபாடுகள் அவர்களுடன் நமக்கு உள்ளது. இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய கொள்கையை அவர்கள் கொண்டுள்ளதால் பிறை மட்டுமின்றி அதைவிட முக்கியமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஹிஜ்ரத் குறித்து எழுதியுள்ள வடிகட்டிய முட்டாள் தனம் உட்பட அனைத்தையும் விவாதிக்க வேண்டும்.
பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும்.
மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.
அப்போது தான் நாட்டில் உள்ள இயக்கங்களிலேயே மடமையில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட முடியும்
அடுத்து அவர்கள் விவாதத்துக்கு அழைக்கும் இசலட்சணத்தைப் பாருங்கள்.

அட கூறு கெட்டவர்களா நாங்கள் ஏன் உங்கள் தலைவர் கமாலுத்தீன் மதினியை சேர்த்து அழைத்து வர வேண்டும்? இதை எழுதும் போது மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டுத் தான் எழுதினீர்களா? எங்களுடன் விவாதம் செய்வது என்றால் எங்களை அழைக்கலாம். எங்கள் எதிரியான உங்கள் தலைவரையும் நாங்கள் அழைத்து வரவேண்டும் என்று எழுதும் அளவுக்கு உங்கள் புத்தி பேதலித்து விட்டடா?.
திகவை விவாதத்துக்கு அழைக்கும் போது ராம கோபலனை அழைத்து வரத் தயாரா என்று அவர்கள் கேட்டால் அது மடமை அல்லவா? ஷேக் அப்துல்லாவை விவாதத்துக்கு அழைக்கும் போது தப்லீகையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டால் அதுவும் மடமை தான்.
அந்த மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் ஓடி ஒளீயும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை.
கீழ்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாகவுள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடயே கருத்து வெறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்
மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்னடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

அல்ஜன்னத் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பிறை சம்மந்தப்பட்ட செய்திகள் உங்கள் சிந்தனைக்காக ..
Source:
**************************************************
No comments:
Post a Comment