ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, November 21, 2010

பிஜெதான் எங்களை சும்மா விடாமல் தொந்தரவு செய்கிறார்!


பிஜெதான் எங்களை 

சும்மா விடாமல் தொந்தரவு செய்கிறார்!


செய்தி ஆதாரம். 
http://intjonline.in/1150.do



வ அலைக்கும் வஸ்ஸலாம்,


சகோதரர் புகாரீ உங்கள் மீது அல்லாஹ்வின் நல்லருள் நிலவட்டும் என துஆச் செய்கின்றோம்!


தாங்களை போன்று முறையாக கேள்வி கேட்கும் எல்லா சகோதரர்களுக்கும் நாங்கள் பதில் தந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு இருப்பதற்கு பதிலாக பிஜெ மீது ஈமான் கொண்ட மிக மிக சில சகோதரர்கள் படிக்கவே நாகூசும் மோசமான விமர்சனங்களை எழுதுகிறார்கள். அவர்களின் மெயில்களை மட்டும் புறம் தள்ளி விடுவோம். சரி விஷயத்திற்கு வருவோம்.


உங்களது முதல் கேள்வி:


1.இந்திய அளவில் எங்கு பிறை பாரத்தாலும் ஏற்பது என்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை உருவானது எப்போது நண்பரே! (i need implemented date)?





”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ.


இந்த ஹதீஸின் முழுமையான விளக்கம் கிடைத்தப் பிறகு, இதன் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் அல்ல சகோதரரே, ஸவுதியில் பார்த்த பிறையை கொண்டுகூட நாம் பெருநாள் கொண்டாட முடியும். உலகம் முழுவதும் ஒரே பிறை என்கின்ற நிலை வரும் வரை இந்த முறையை நாங்கள் கடைபிடிக்க தீர்மானித்துள்ளோம்.


2.மேலே உள்ள மதனி அவர்களும் தான் பல்டி அடித்துள்ளார் ஏன் நண்பரே அவரை நீங்கள் விமர்சனம் செய்யவில்லை? 



சகோதரரே! பிஜெயை பற்றி தெரியாத காரணத்தால் தாங்கள் அவ்வாறு சொல்கிறீர்கள். 5 அமர்வுகள் இருந்தார்களே, அதில் இவர், தான் கருத்து மட்டும்தான் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான அத்தனை முயற்சியினையும் எடுத்து இருப்பார். ஆகவே அவர்கள் வேறு வழியின்றி இவர் கருத்துக்கு ஒத்து போய் இருக்கலாம்.


ஜாக் என்ற அமைப்பு உருவான பிறகு அதன் தலைமை உலகம் எல்லாம் ஒரு பிறை என்றுதான் கடைபிடித்து வருகிறது.



3. PJ அப்படிப்பட்டவர் என்றாள் அன்று நீங்களும் தான் அவருடன் இருந்தீர்கள்,எங்கு பார்த்தாலும் பிறையை ஏற்கவேண்டும் என்று சொல்லிட்டாரே பிறகு என் நண்பரே இத்தனை வருடம் அதற்கு மாற்ரமாக நீங்கள் நடந்து கொண்டீர்? இந்த வருடம் தான் நீங்கள் இருந்தது தவறானது என்று உணர்த்ீர்களா நண்பா? 



ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆரம்பத்தில் அவர் சொல்வது மார்க்கம் என்றுதான் கருதி இருந்தோம். ஆனால், அவர் தன் இஷ்டத்திற்கு மார்க்கத்தை வளைக்கக் கூடியவர் என தெரிந்த காரணத்தால், அவர் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்வது இல்லை. பிற அறிஞர்களின் கருத்துக்களுடன் உரசிப் பார்த்து முடிவு செய்கின்றோம்.



4.இதன் அடிபபடையில் இப்பொழுது நான் கூறுவேன் நீங்கள் அனைவரும் ஒருமணிதனுக்காக இத்தனை வருடம் அமள்கள் செய்தீர்கள் அல்லாஹ் விற்கு பயந்து அல்ல என்ன உண்மைதானே?


இல்லை சகோதரர் புகாரீ அவர்களே! நீங்கள் கேட்பது வெளிப்படையாக பார்ப்பதற்கு சரியாக தோன்றலாம். உண்மை அவ்வாறு அல்ல. அவர் மார்க்கத்தை நன்கு ஆய்வு செய்யக்கூடியவர் என்ற அடிப்படையில் பின்பற்றினோம். ஆனால் அவர் தன் சுய இஷ்டத்திற்கு செல்பவர் என கண்ட பிறகு நாங்கள் மாற்றிக் கொண்டோம்.


ஆகவே நாங்கள் ஒரு மனிதனுக்காக அமல் செய்யவில்லை. அல்லாஹுக்காவே அமல் செய்தோம். நீங்கள் சொல்வது போல் மனிதனுக்காக நாங்கள் அமல் செய்திருந்தால், இப்போதும் எவ்வித தயக்கமும் இல்லாமல் அவர் சொல்வதை எல்லாம் தலையாட்டிக் கொண்டு தொடர்ந்து இருப்போம்.



5.உண்மையாளராக நீங்கள் இருந்திருந்தால் PJ மசாயில்களில் குழப்பூபவர் என்றாள் ஏன் நண்பா இரண்டு வருடங்களுக்கு முன்புவரை எவரும் வாய் திறக்க வில்லை? 

தவறு என்று தெரிந்தால் உடனே விமர்சனம் செய்ய வேண்டியது தானே கால தாமதம் ஏன் நண்பரே ? உங்களின் இந்த செயலை நான் இப்படி கூட எடுத்து கொள்ளலாம் தானே அதாவது இயக்கத்தில் இருந்து விளக்கிவிட்டார்களே இவர்களை நாம் சும்மா விடக்கூடாது, ஏதாவது சொல்லி இவர்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்று
சகோதரர் புகாரீ, அவரை எப்போது மார்க்கததை குழப்புவர் என கண்டோமோ அப்போது நாங்கள் அவரிடமிருந்து விலகி விட்டோம். அவருடைய விஷயங்கள் வெளி உலகிற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகதான் நம்மீது அவர் சில சந்தர்ப்ப செட்அப்களை கொண்டு ஜோடித்தார். அவைகளை வீண் விவாதமாக்கி மக்களின் நேரத்தை வீணடித்தார்.
அவரை சும்மா விடக்கூடாது என நாங்கள் எப்பேர்தும் எண்ணியதில்லை. அவர்தான் எங்களை சும்மா விடக்கூடாது என இப்போதும் கருதுவதால்தான், எங்களுடைய அமைப்பையே களவாட நினைக்கிறார். அதற்கான சூழ்ச்சி வலைகளை பின்னி வருகிறார். தனது நாவன்மையால் தன்னால் போடப்பட்ட சதி செயலில் ததஜவுடன் முடிச்சுப் போட்டு தன்னுடைய பாவத்திற்கு அப்பாவி ததஜ சகோதரர்களையும் கூட்டு சேர்த்து விட்டார்.
நாங்கள் பெரியவனான அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அவனே இந்த சூழ்ச்சிகளையும் சதிகளையும் போக்கும் வல்லமை கொண்டவன். அவன் எங்களுக்கு உதவி அளிப்பான்.



வஸ்ஸலாம்.
செய்தி ஆதாரம். 
http://intjonline.in/1150.do









************************************************** ******************* 

No comments:

Post a Comment