ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, November 26, 2010

திருவிதாங்கோட்டில் பள்ளிவாசல்..


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். திருவிதாங்கோடு விஷயமாக ஆன்லைன் பீஜெ-யை பார்த்து பதில் தருமாறு கேட்டிருந்தீர்கள் ....

அதை நான் பார்ப்பது கிடையாது. நீங்கள் விளக்கம் கேட்டதற்காக இன்று அதனைப் பார்த்தேன். இது சம்மந்தமாக சில சகோதரர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். என்னிடத்தில் இது குறித்துக் கேட்டவர்களிடத்தில் உண்மையை தெளிவுபடுத்திவிட்டேன். திருவிதாங்கோட்டில் புதிதாகக் கட்டப்பட்ட இவர்கள் குறிப்பிட்டுள்ள முஹைதீன் பள்ளி 1966 திறக்கப்பட்டது. அப்போது நான் பள்ளி வளாகத்தில் உள்ள மத்ரஸாவில் பயின்று கொண்டுயிருந்தேன். அப்போது என்னுடைய வயது 15.
திருவிதாங்கோட்டில் இதுவரை தவ்ஹீது பள்ளிவாசல் எதுவும் கட்டப்படவில்லை திருவிதாங்கோட்டில் தவ்ஹீது பள்ளி கட்ட நான் சவூதியிலிருந்து உதவி பெற்றக்கொடுத்தேன் என்று கூறியது பகிரங்கப் பொய், அவதூறு.
திருவிதாங்கோட்டில் உள்ள எந்த பள்ளிவாசலுக்கும் எந்த அரசாங்கத்திடமிருந்தும் என்னுடைய பரிந்துரையின்பேரில் பணம் பெற்றுக்கொடுக்கவில்லை.
சவூதி அரசாங்கம் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு மட்டும்தான் உதவி வழங்கும் என்பது தவறு.
திருவிதாங்கோட்டில் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியுடன் பிரச்சாரம் செய்தது 1986 (JAQH துவங்கப்படவில்லை) அப்போது பள்ளிவசால் கட்டுவதற்கு நான் உதவியதை அவர் சுட்டிக்காட்டியதாகவும் கண்டித்ததாகவும் குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு மாற்றமானது.
மதனிகளின் பரிந்துரையின் மூலம் மட்டும் தான் வஹ்ஹாபிகளின் உதவியை பெறமுடியும் என்று கூறுவது இவர்களது அறியாமையைக் காட்டுகின்றது.
ஷிர்க் நிறுவனத்தை தவ்ஹீத் நிறுவனம் என்று சவூதியை ஏமாற்றியது யார் என்பதை இவர்கள் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும், தவறினால் இவர்கள் மாபெரும் பொய்யர்கள் என்பதை இவர்களை கண்மூடி பின்பற்றுகின்றவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
இவர்கள் இடம்பெறச்செய்திருக்கும் கல்வெட்டு பள்ளிவாசலுக்குரியதல்ல அரபிக்கல்லூரி கட்டிடத்திற்கான கல்வெட்டு 1977ல் திறக்கப்பட்டது.
எந்த பள்ளிவாசலை இவர்கள் குறிப்பிட்டுள்ளார்களோ அந்த பள்ளிவாசல் நிர்வாகிகளை அணுகி யாருடைய முயற்சியால் உதவி கிடைத்தது என்று கேட்டால் உண்மை தெரிந்து விடும்.
திருவிதாங்கோட்டு மதரஸாவில் நான் பட்டம் பெற்றேன் என்று குறிப்பிட்டிருப்பது பொய்.
தவறுதலாகச்சொல்லிவிட்டேன் என்று சொல்வதை விட்டுவிட்டு ஒரு பொய்யை நியாயப்படுத்த பல பொய் சொல்கிறார்கள்.
வாயில் பூட்டுபோடப்படும் மறுமை நாளில் எல்லா உண்மைகளும் வெளிவரும்.
எஸ். கமாலுத்தீன் மதனி

Source:
http://www.jaqh.org/index.php?news&nid=60

No comments:

Post a Comment