ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, November 26, 2010

அவதூறுக்கு மேல் அவதூறு பரப்பும் உணர்வு ஏடு


அவதூறுக்கு மேல் அவதூறு பரப்பும் உணர்வு ஏடு

02-10-2010
Source:
http://www.jaqh.org/index.php?news&nid=74

'உணர்வு' ஏட்டில் 'ஜாக்' அமைப்பபைப் பற்றி வெளிவந்த ஒரு அவதூறு செய்திக்கு நமது இணையத்தளத்தில் அதற்கான மறுப்பு வெளியிடப்பட்டது. அதற்கு பதில் கூறும் விதமாக 'ஜாக் மீது உணர்வு அவதூறு கூறியதா?' என்று தலைப்பிட்டு மீண்டும் பொய்களை வரிக்கு வரி அவிழ்த்து விட்டுள்ளனர். வரிக்கு வரி வெளுத்து வாங்குவதில் இவர்கள்தான் அசகாய சூரர்களாயிற்றே? பொய்யை மீண்டும் மீண்டும் பரப்புவதால் அது உண்மையாகிவிடும் என்ற நம்பிக்கை போலும்.

1) உணர்வில் வந்த செய்திக்கு உணர்விடம்தான் கேட்கவேண்டும் என்று கூறும் இவர்கள், ஹனிபா நகரில் நடந்த விஷயம் உட்பட அவர்கள் எடுத்து வைத்துள்ள அனைத்து விஷயங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் விசாரித்து விட்டுத்தான் வெளியிட்டார்களா? யாரிடமாவது எப்போதேனும் இவற்றைக் குறித்து விசாரித்தார்களா? ஒருவர் செய்யும் தவறை மறைப்பதுதான் மனிதாபிமானம் என்ற இங்கிதம் கூட இல்லாமல் உடனடியாக அதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டுவது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்! இந்த கரடு முரடு மனிதர்களிடம் இவற்றையெல்லாம் எதிர் பார்ப்பது அர்த்தமற்றதுதான்.
2) ஹனிபா நகர் பள்ளி, ஜாக் அமைப்பின் பள்ளிவாசல் அல்ல என்பதை நமது இணையத்தளத்தில் தெரிவித்த பின்னரும்  அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் அதை மீண்டும் ஜாக் பள்ளி என்று கூறியிருப்பது  எப்படியாவது ஜாக் - ஐ குற்றவாளியாக்கி விட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையே வெள்ளிப்படுத்துகிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது மாதிரி ஒரு பதிலை சொல்லி சமாளிக்க முற்பட்டுள்ளனர். ஜாக்கின் தளமாக செயல்படும் பள்ளி எல்லாம் ஜாக் பள்ளி என்று கூறுவதை ஜாக் ஏற்கவில்லை. அது நேர்மையுமல்ல. ஒருவருக்கு ஒரு பள்ளியுடன் உள்ள நெருக்கமான தொடர்பை வைத்து அது அவருடையது என்று கூறுவது தீய எண்ணம் கொண்டதாகும். இவர்கள் இந்த தீய உபாயத்தை பயன்படுத்திதான் ஜாக் கொள்கையின் அடிப்படையில் செயல் பட்டு வந்த ஜாக் அமைப்புக்கு சொந்தமான பல பள்ளிகளை அபகரித்து வைத்துள்ளனர். இன்னும் பல பள்ளிகளை அபகரிக்க முயற்சி செய்தும் வருகின்றனர். எனவே இந்த வாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
3) ஹனிபா நகர் இமாம், ஜாக் அமைப்போடு தொடர்பு வைத்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால் அவர் தனியார் நிர்வாகத்கின் கீழ் உள்ள அந்த பள்ளிவாசலில் அந்த நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட இமாம். ஜாக் பள்ளியின் இமாம் அல்ல. அவர் அந்த பள்ளிவாசல் நிர்வாகத்தின் இமாமாக இருப்பதால்  அவர்தான் அங்கு தொழுகை நடத்துவார். அன்றும் தொழுகை நடத்தினார். இப்தார் நிகழ்ச்சியில் கிராஅத்தும் ஓதினார். மாற்று சமயத்தவர் மத்தியில் அல்லாஹ்வின் வசனத்தை ஓதி மொழி பெயர்ப்பு செய்ததில் இவர்கள் என்ன தவறை கண்டு விட்டார்கள்?.
4) அது சரி...! இப்தார் நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்களும் அழைக்கப்பட்டது எந்த வசனத்திற்கு அல்லது ஹதீஸுக்கு முரணானது? விளக்குவார்களா? இரண்டு சமுதாயத்தவர் மத்தியில் பரஸ்பர அன்பு ஏற்படுவதுடன் இஸ்லாத்தின் செய்தியை அவர்களிடம் கொண்டு செல்ல ஒரு நல்ல வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. ஆனால் இவர்கள் ஏதோ வானமே இடிந்து கீழே விழுந்து விட்டதைப்போல ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவுகிறார்கள். இவர்கள் கூறுவதைதான் மார்க்கம் என்று எல்லோரும் ஏற்கவேண்டுமா? மற்றவர்களெல்லாம்  மார்க்கம் தெரியாதவர்களா? அல்லது மார்க்கத்தை சொல்ல இவர்களுக்கு மட்டும் அல்லாஹ்விடமிருந்து சிறப்பு அதிகாரம் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா? முதலில் மற்றவர்களிடம் உள்ள குறைகளை துருவித் துருவி ஆராய்வதை நிறுத்தி விட்டு தங்களிடம் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கு வழி காணட்டும்.
5) முன்னாள் டி.எஸ்.பி மலுக்கு முதலி கலந்து கொண்டதாக தெரிவித்துள்ள ராஜீவ்காந்தியின் சிலை வைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்காக - இவர்கள் அந்த செய்தியை பரப்பும் முன்பே - அவரை அழைத்து ஜாக் நிர்வாகம் கண்டித்ததும் அவர் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதையும் இவர்கள் தெரிந்திருந்தும் அவர்மீது மீண்டும் களங்கம் சுமத்துவது நேர்மையானவர்களின் செயலாக இருக்க முடியுமா? தவறு செய்தவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை என்கிறார்களா? மட்டுமல்லாமல் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சமயத்தில் ஜாக்கில் உறுப்பினராக இல்லை. மேலும் அவர் அந்த சிலைவைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவரை நிர்வாகியாக தேர்வு செய்ய ஜாக் பொதுக் குழுவில் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது என்பதும் அவதூறு. இவர்கள் அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்களா? அந்த பொதுக்குழுவில் மலுக்கு முதலி மீது கூறப்பட்ட பிரச்சனையே வேறு. இந்த உண்மை தெரியாமல் உளறுகிறார்கள்.
6) முந்தைய காலங்களில், ஒரு பெண்ணை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது வழிகேடு என்று எழுதி அதற்கான நபிமொழியையும் எடுத்து எழுதியதோடு மட்டுமல்லாமல் பொது மேடைகளிலும் முழங்கி விட்டு இப்போது ஊர் முழுக்க சென்று அந்தக் கட்சியை மிஞ்சும் அளவில் மக்களிடம் ஓட்டு சேகரித்ததும் எதற்காக? அதன் மர்மம்தான் என்ன?   இந்த பணியை இஸ்லாத்தின் வளர்சிக்காகத்தான் செய்தார்களா?  'அந்த ரகசியம்' நாடறிந்த விஷயம். நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துணிவில்லாமல் கோழைத்தனமாக "நீ செஞ்சியே" என்று தங்களால் ஜோடிக்கப்பட்ட பழைய பஞ்சாங்கத்தை பாடினால் அது பதிலாகுமா?.
7) அடுத்து, அஷ்ரப் பள்ளியின் இமாம் செய்யித் அலி பைசி, அந்த பள்ளியின் தலைவர் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதை தவறு என்று அவரிடம் சுட்டிக் காட்ட வில்லை என்பது இவர்களுக்கு தெரியுமா? சத்தியம் செய்வார்களா? செய்தாலும் செய்வார்கள். தங்களது சொந்த அமைப்பில் இருந்தவர்களிடமே "முபாஹலா" நடத்திய பெருமைக்குரியவர்களாயிற்றே! அல்லது இவர்களைப்போல் ஊரறிய ஒருவர் செய்த தவறை கொட்டடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா? அதற்கு நாம் தயாரில்லை. செய்யது அலி பைஸி மத நல்லிணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் என்ன தவறு? ஷிர்க்கை ஆதரித்து பேசினாரா? செயல்பட்டாரா? மாறாக, மாற்று சமயத்தவர் மத்தியில் இஸ்லாத்தை சொல்வதற்கு அதை ஒரு வாய்ப்பகத்தான் பயன்படுத்தினார். இதில் ஒன்றும் தவறு இல்லை.
8) அப்துர்ரஹீம் என்ற பெயரில் ஜம்யிய்யாவில் யாரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தவில்லை. சம்பந்தப்பட்ட நபருடைய பெயரைக்கூட சரியாக தெரிந்து கொள்ளாமல் எவரோ வாந்தி எடுத்ததை சாப்பிடலாமா? சிலரது புகைப்படங்களுடன் அப்பாஸ் அப்துர்ரஸாக் என்பவரது புகைப்படமும் இணைத்து கலைஞரை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது. இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் தனது அனுமதி இல்லாமல் தனக்கு தெரியாமல் நடந்த ஒன்று அது என்று தன்னிலை விளக்கம் அளித்ததுடன் இந்த இயக்கத்துக்கு என்மூலம் களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி இது என்று கூறி (தேவையில்லை எனினும்) அதற்கு முழு பொறுப்பேற்று ஏற்கனவே அவர் நம்மிடம் தமது ராஜினாமாவை தந்து விட்டார். உண்மையை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக விசாரிக்காமல் செய்தியை வெளியிட்டது இவர்கள் பத்திரிகை நடத்தும் லட்சணத்தை காட்டுகிறது.
9) அல்ஜன்னத்தின் தரத்தை பற்றி இவர்கள் விமர்சித்திருப்பது, "சல்லடை ஊசியை பார்த்து உன்னிடம் ஒரு ஓட்டை இருக்கிறது" என்று சொல்வதைப்போல இருக்கிறது. பச்சைப் பொய்களை பக்கங்களில் நிரப்பி ஆதாயம் தேட வேண்டிய எந்த அவசியமும் அல்ஜன்னத்திற்கு இல்லை. இது செய்திகளை காசாக்கும் பத்திரிகை அல்ல.
10) யார் தவறு செய்தாலும் (ஜாக் இயக்கத்தினர் உட்பட) அவர்களை திருத்துவதற்குத்தான் ஜாக், இயக்கம் நடத்தி வருகிறது; சுய விளம்பரத்துக்காகவோ கூட்டத்தை கூட்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவோ அல்ல. தவறு யார் செய்தாலும் அது தவறுதான். ஆனால் தவறு செய்தவர்களை இஸ்லாம் கூறும் அழகிய முறையில்தான் திருத்த முயற்சிக்க வேண்டும். இதை என்றைக்காவது இவர்கள் செய்துள்ளார்களா? "இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்" காபிர்களிடம் மட்டும்தானா? முஸ்லிம்களிடம் இல்லையா? தங்களை சுற்றி இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளை எல்லாம் காபிர்களாக்கி விட்டு, காபிர்களை எல்லாம் முஸ்லிம்களாக்க புறப்பட்டு விட்ட அதிசயம்தான் என்ன? தாங்கள்தான் "பரிசுத்தவான்கள்" என்று மக்கள் மத்தியில் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவர்களைப்பற்றி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பொய் பேசுவதையும் அவதூறு சொல்வதையும் தங்களது சுய லாபத்துக்காகவும் பிழைப்புக்காகவும் இதை ஒரு தொழிலாகவே கொண்டு செயல் பட்டு வரும் கூட்டம்தான் இவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். மற்றவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் மலிவான ஊடகங்கள் செய்வது போல் அவற்றை பெரிது படுத்தி நடுச் சந்திக்கு கொண்டு வருவதற்கான காரணம், தாங்கள் செய்து வரும் பெரிய பெரிய தில்லு முல்லுகளை மக்கள் கண்ணிலிருந்து மறைப்பதற்காகத்தான்.
11) பல அவதூறுகளையும் பொய்களையும் நாகூசாமல் அல்லாஹ்வை அஞ்சாமல் பரப்புவதில் இவர்கள் வல்லவர்கள். இவ்வாறு அவர்கள் பரப்பிய அவதூறுகளில் ஒன்றைமட்டும் இங்கே எடுத்து வைக்கிறோம்.
         
குமரிமாவட்டம் திருவிதாங்கோடு என்ற ஊரில் கமாலுத்தீன் மதனி கட்டிக் கொடுத்த பள்ளிவாசலில் குத்பியத் நடக்கிறது என்று அவதூறை இலங்கைக்கு சென்று பரப்பினார் இவர்களின் குருநாதர். குமரிமாவட்ட மக்கள் திருவிதாங்கோட்டில் கமாலுத்தீன் மதனி கட்டிகொடுத்த பள்ளிவாசல் எங்கே காட்டுங்கள் என்று கேள்விக்கணைகளை வீசியபோது பதில் சொல்ல முடியாமல் அதிலிருந்து தப்பிக்க கொஞ்சம் மாற்றி  "பள்ளிவாசல் விரிவாக்கம்" செய்ய உதவினார் என்று ஒரு பொய்யை மறைக்க அடுத்த பொய்யை கூறினர். அதையும் மறுத்து மக்கள் விளக்கம் கேட்டபோது அதிலிருந்து தப்பிக்க "மதரசாவுக்கு வாங்கி கொடுத்தார்" என்று அடுத்த அந்தர் பல்டி அடித்தனர். அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்  என்று மக்கள் மீண்டும் துளைத்தெடுத்தபோது "அவர்கள் மறுத்தால் நாங்கள் ஆதாரத்துடன் வெளியிடுவோம்" என்று சவடால் விட்டனர் அவரது சீடர்கள். எங்களிடம் அதற்கான கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம் என்று பிதற்றினார்கள். "கல்வெட்டை வெளியிடு" என்று மக்கள் மீண்டும் கேட்க வேறுவழியில்லாமல் கல்வெட்டும் வெளியிட்டார்கள். அதை படித்தவர்கள் காறித்துப்பினார்கள், இவர்களது அவதூறை புரிந்து கொண்டார்கள். காரணம், இவர்கள் வெளியிட்ட ஆதாரத்தில் கமாலுத்தீன் மதனி உதவினார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை. மறுப்பு வெளியிட்டால் நாங்கள் நிரூபிப்போம் என்று சவால் விட்டவர்கள், கமாலுத்தீன் மதனி அதுபற்றிய  மறுப்பை வெளியிட்ட பின்பு அதை நிருபித்துக் காட்டினார்களா?
வாயில் பூட்டு போடப்படும் மறுமை நாளில் எல்லா உண்மைகளும் வெளியே வரும் இன்ஷா அல்லாஹ். தான் மட்டுமே புத்திசாலி, மற்றவர்களெல்லாம் ஏமாளிகள் என்று காலம் முழுவதும் மக்களை எவராலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. பிடி இறுகும்போது அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.

நமது இந்த பதிலை படித்ததும் குருநாதரும் சீடர்களும் வெகுண்டெழுந்து மிகவும் தரம் தாழ்ந்து பேசவோ எழுதவோ செய்யலாம். இன்னும் பல அவதூறுகளை கூட அள்ளி வீசலாம். அது அவர்களுக்கு பழக்கமானதுதான். எனினும் நிச்சயமாக நாம் ஒரு போதும் நமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டோம். அல்லாஹுவை என்றும் அஞ்சி நடப்போம், இன்ஷா அல்லாஹ்...
Source:
http://www.jaqh.org/index.php?news&nid=74

No comments:

Post a Comment