ஆளுக்கு தக்க வேடம் போடும் ததஜவின் மேலாண்மையும்! கீழாண்மையும்!
Source:
http://intjonline.in/1184.do
அல்லாஹ்வின் கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி மற்றும் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்து சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டது.
31 மாடுகளும் 16 ஆடுகளும் ஜமாஅத் சார்பாக குர்பானி கொடுக்கப்பட்டு பங்குகள் முறையாக விநியோகம் செய்யப்பட்டது. மாட்டு இறைச்சி கிட்டத்தட்ட 600 கிலோவும் 60 கிலோ ஆட்டு இறைச்சியும் கடையநல்லூரில் உள்ள ஏழைகள் மற்றும் கொள்கை சகோதர்களுக்கு ஹதியாவாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இது கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெட்டில் வெளியிடப்பட்ட செய்தியாகும். கடையநலல்லூரில் இரண்டு நிர்வாகங்கள் உள்ளன. ஒன்றுமஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி. மற்றொன்று தவ்ஹீத் ஜமாஅத்.முபாரக் கமிட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் தலையிட முடியாது. ஆனால் இரண்டிலும் மேலாண்மை செய்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஸைஃபுல்லாஹ் ஹாஜா தான்.
தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாஅத் உருவாகுவதற்கு 4 ஆண்டுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட கீழக்கரை கேஈடிசி நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டதற்காகத்தான் வரிந்து கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுத்தார்கள்.
ஆனால் அவர்களுடைய மேலாண்மையே இது போன்று இரண்டு நிர்வாகத்தை நடத்தும் போது மட்டும் ஒன்றும் அறியாதவர்களைப் போன்று வாய் மூடி மவுனியாக இருக்கின்றார்கள். கடையநல்லூரில் இரண்டு நிர்வாகங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் ஸைஃபுல்லாஹ்வின் மீது நிஜத் தலைவர் பிஜே நடவடிக்கை எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பிஜேக்கு படம் காட்ட தவ்ஹீத் ஜமாஅத். தவ்ஹீத் ஜமாஅத் ஸைஃபுல்லாவின் மீது நடவடிக்கை எடுத்தால்மஸ்ஜிதுல் முபாரக்கின் மயிரைக் கூட தவ்ஹீத் ஜமாஅத்தால் பிடுங்க முடியாது. ஏனென்றால் அது தனிக் கமிட்டி. அனைவரும் பிஜேயை நன்றாகத்தான் ஏமாற்றுகிறார்கள். அப்பாவிகளைத்தான் பிஜே பாய்ந்து பிராண்டுவார். மேலாண்மைகளை கண்டு கொள்ள மாட்டார்.
-நல்லவன்.
Source:
ஆளுக்கு தக்க வேடம் போடும் ததஜவின் மேலாண்மையும்! கீழாண்மையும்!
http://intjonline.in/1184.do
(பெரிதாக பார்க்க படத்தின் மிது கிளிக் செய்யவும்)
No comments:
Post a Comment