பொய்யன் பெருநாள் எப்போது
பொய்யன் டீஜேயின் பெருநாள் எப்போது
இந்தியாவில் எங்கே பிறை பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலை பாடு என்று பொய்ய டீஜே கும்பல் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த நிலையில் அவர்கள் இருக்கவில்லை. வரும் ஆண்டுகளில் டவுன் காஜி அறிவிப்பதற்கு முன்னால் கேரளா ஒரு நாளைக்கு முன்னர் பிறை பார்த்த்தாக அறிவிக்கும் போது பொய்யர்களின் இந்த சந்தர்ப்பவாதம் அம்பலமாகும்
ஆனால் பொய்யன் டீஜேயில் மாநிலச் செயலாளர்களில் ஒருவரும், தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தாவா செண்டரில் ஆசிரியராக இருந்த போது முதல்வர் என்ற முறையிலும் தகுதி அடிப்படையிலும் ஆலிம் ஒருவருக்கு இவரை விட கூடுதல் சம்பளம் கொடுத்தார்கள். இது நடந்த சில நாட்களில் பாக்கர் நீக்கம் நடைபெற்றது.
சம்பளம் குறைவு என்பதற்காக ஜமாஅத்தில் இருந்து கோபித்துக் கொண்டு போனவர் தான் அப்துல் ஹமீத் என்பவர்
அவர் இன்று பொய்யன் டீஜேயில் மாநிலச் செயலாளராக இருக்கிறார்,
அவர் பெருநாள் பற்றி என்ன சொல்கிறா?
பொய்யன் டீஜே தலைமை அறிவித்த நாளில் பெருநாள் இல்லையாம். அதற்கும் ஒருநாள் முன்னர் தான் பெருநாளாம். 16 ஆம் தேதி பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது தான் எனது கொள்கை என்று இவர் சொல்கிறார். ஆனால் 17 ஆம் தேதி கிழக்கரை பொய்யன் கும்பலின் பெருநாள் தொழுகையில் பெருநாள் உரை நிகழ்த்தியுள்ளார்/
பொய்யன் கும்பலின் பெருநாள் நிலைபாடு என்ன?
Source:
*********************************************************************
பிறையை வைத்து பிரச்சினையை திசை திருப்பும் குறைமதியாளர்கள்!
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
பாக்கர் அமைப்பு பெயரை அநியாயமாக ஆக்கிரமித்த தனது களவாணித்தனத்தை மறைக்க, அந்த பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்ப, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறை தொடர்பான ஒரு செய்தியை, அபகரிக்கப்பட்ட பெயரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியுள்ளார் பீஜே.
அதில், இந்தியாவில் எங்கே பிறை பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைபாடு என்று பொய்ய டீஜே கும்பல் அறிவித்துள்ளது.இதற்கு முன்னர் இந்த நிலையில் அவர்கள் இருக்கவில்லை. என்று கூறியுள்ளார் நொடிக்கொரு பல்டி அடிக்கும் பீஜே.
இவர் பிறை விஷயத்தில் இதற்கு முன் இருந்த அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறாரா? என்பதை உலகறியும்.தகவல் பிறை, தத்தமது பகுதிப்பிறை, மாவட்டப் பிறை, மண்டலப் பிறை, மாநிலப்பிறை என இவர் அடித்த பல்டிகள்,எடுத்த அவதாரங்கள் ஏராளம். பிறை மட்டுமல்ல. மார்க்கத்தின் ஏனைய எத்துணையோ மசாயில்களில் இவரது பரிமாணங்களை பட்டியலிட்டால் பத்துநாள் லீவு எடுத்து படிக்கவேண்டும். அப்படிப்பட்டவர் இந்திய அளவில் எங்கு பிறை பாரத்தாலும் ஏற்பது என்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையை குறை கூறுவது, அவர் அடிக்கடி கூறும் பழமொழியான 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை'என்பதற்கு அவரே சாலப் பொருத்தமானவர்.
பொய்யன் கும்பலின் பெருநாள் நிலைபாடு என்ன? என்கிறார். பீஜே.
அடுத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் நிலைப்பாட்டை விமர்சிக்க, இதஜவின் மாநிலச்செயலாளர் அப்துல்ஹமீது அவர்களின் ஆடியோ கிளிப்பிங்கை போட்டு இந்திய அளவில் எங்கு பிறை கண்டாலும் அதை ஏற்று பெருநாள் கொண்டாடுவது என்பது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
அந்த வகையில்தான மாலேகானில் கண்ட பிறையை அடிப்படையாக கொண்டு, இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் கொண்டாடிய 17 ம் தேதி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் பெருநாள் கொண்டாடியது. ஆனால் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்பது சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.
இதை வைத்து இதஜ பிறைக் குழப்பத்தில் உள்ளதாக காட்ட முயலும் பீஜே, ஆடியோவில் அப்துல் ஹமீது சொன்னது அவரது கொள்கைதான் என்று தன்னையறியாமல் ஒப்புக் கொண்டுள் ளதை பாருங்கள்;
16 ஆம் தேதி பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது தான் எனது கொள்கை என்று இவர் சொல்கிறார்.
அதாவது அப்துல்ஹமீது அவர்களின் தனிப்பட்ட கருத்து உலகம் முழுமைக்கும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடவேண்டும் என்பது. அந்த வகையில் 16-ம் தேதி பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது எனது கருத்து என்று அப்துல் ஹமீது கூறியதை வைத்துக்கொண்டு, அதை எழுத்திலும் ஒப்புக்கொண்டு, திசை திருப்ப பார்க்கிறார் திருவாளர் பீஜே.
சரி! இப்போது கேட்கிறோம். ததஜ மவ்லவிகள், பேச்சாளர்கள், மாநில நிர்வாகிகள் அனைவரும் அனைத்து மசாயில்களிலும் நூல் பிடித்தது போன்று ஒத்த கருத்தில் இருக்கிறோம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா?
அப்படி அவர் துணிவோடு அறிவித்தால், அவருக்கும் ஏனைய மவ்லவிகளுக்கும், உள்ள மஸாயில் முரண்பாடுகளை இன்ஷா அல்லாஹ் பட்டியலிடுவோம்.
-அப்துல்முஹைமின்.
Source:
No comments:
Post a Comment