ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, December 25, 2010

பொய்யன் பிஜெயின் போலி வழக்குகள்


பொய்யன் பிஜெயின் போலி வழக்குகள் தள்ளுபடி!

அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோசடிப்பேர்வழிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கள்ள ஆவணங்களை கொண்டு தடை ஆணை பெற்றிருந்தனர்.
இந்தத்தடையை நீக்குமாறு ஐ.என்.டி.ஜே சார்பில் முறையீடு செய்யப்பட்டது.தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில்,  இன்று (22/12/2010) தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி ராமசுப்ரமணியன், எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயங்க எவ்விதத்தடையும் இல்லை என்றும், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் 5 பேர் மீது தொடரப்பட்ட (அதாவது டிசம்பர்-6 போராட்டங்கள் உள்ளிட்ட இயக்கப்பணிகள் செய்ததாக தொடரப்பட்ட) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.

Source:
http://intjonline.in/1291.do


No comments:

Post a Comment