வெட்கப்படும் விஷயங்களை ஏன் அனுப்புகிறீர்கள்?
ரெம்ப புதுமையான சகோதரராக தாங்கள் இருக்கிறீர்கள் சகோதரர் இஸ்மாயில். ஒருதலைப் பட்சமான சிந்தனைப் போக்கு உங்களை மாற்றி விட்ட காரணத்தால் நீங்கள் எழுதிய ஒன்றை நாங்கள் வெளியிட்டால் வெட்கம் இல்லையா என்கிறீர்கள். உங்களாலேயே வெட்கம் படும் விஷயங்களை ஏன் சகோதரரே அனுப்புகிறீர்கள்?
புறம் பேசுவதற்கும் அவதூறுக்கும் வித்தியாசம் தெரியுமா சகோதரர் இஸ்மாயில்? நடைபெற்ற சம்பவமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மனிதர் இல்லாத போது அவர் குறித்து பேசுவது புறம். நடைபெறாமலே இட்டுக்கட்டி பேசுவது அவதூறு ஆகும்.
கண்ணியமிக்க ஸஹாபி மாயிஸ் (ரழி) அவர்களுடைய சம்பவம் நடைபெற்றது இஸ்லாமிய ஆட்சியின் கீழ். தண்டனை கொடுத்தவர்கள் எந்த மனிதருடனும் ஒப்பிட முடியாத மாபெரும் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள். அதை முரண்பாட்டின் மொத்த உருவம் பிஜெயின் விசாரணைத் தீர்ப்பை கொண்டு ஒப்பிடாதீர்கள்.
//மாயிஸ் ரழி அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மரண தண்டனை பெற்று இருக்கிறார். ஆனால் உங்கள் பாக்கர் ததஜ விடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மரன தண்டனை பெற்றார அல்லது இறந்துதான் போனாரா? இன்னும் உயிருள்ள பிணமாக இருந்து கொண்டு செய்த குற்றத்தை நியாயம் அல்லவா படுத்துகிறார் உங்கள் மன்மதன் பாக்கர்.//
சிந்தனையை பிஜெயிடம் தெளிவாக அடகு வைத்து விட்டீர்கள் என முழுவதும் நிரூபணம் ஆகிறது. ஒரு பித்து பிடித்த மனிதர் எப்படி தன் நினைவின்றி உளருவாரோ அப்படி உளிரி உள்ளீர்கள்.
எந்த பாக்கர் குறித்து நீங்கள் பேசுகிறீர்களோ, அந்த பாக்கர் எவ்வித பாலியல் குற்றமும் செய்யவில்லை என்று மணிக்கணக்கில் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலும் பிஜெ பேசினாரா? இல்லையா?
அந்த வீடியோ காட்சிகளை எங்களது நெட்டில் வீடியோ என்ற பகுதியில் சமுதாய வீடியோக்கள் என்ற பகுதியில்
அவருடைய பேச்சை கேளுங்கள் சகோதரரே!
ஒரு பாலியல் குற்றம் சுமத்த 4 சாட்சி வேண்டும் என்றும், உண்மையிலேயே ஒரு ஆணும், பெண்ணும் விபச்சாரம் செய்த ஒன்றை ஒரே ஒரு நபர் பார்த்தாலும், அதை அவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது அவருக்கும் 80 கசையடி கொடுக்க வேண்டும் எனவும் பிஜெ சொல்கிறார். பாக்கர் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார் என குற்றம் சுமத்தும் இஸ்மாயில் அவர்களே!
பாக்கர் விபச்சாரம் செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நாலு சாட்சி வைத்து இருக்கிறீர்களா? இல்லாவிட்டால், பிஜெயின் குர்ஆன் ஹதீஸ் விளக்கப்படி உங்களுக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது மாபெரும் அவதூறு. அதற்கான தண்டனையை இங்கு இல்லாவிட்டாலும் நாளைய மறுமையில் உண்டு.
பாக்கரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட இட்டுக்கதையில் அப்பாவி பெண்களின் பெயர்களும் உட்படுத்தப்படுகிறது என்பதை நன்கு யோசித்து பாருங்கள். பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் கண்ணீர் பதுவாவிற்கு எந்த திரையும் இல்லை என்பதை நன்கு உணருங்கள்.
யாருக்காவாவோ உங்களது அமல்களின் பலன்களை இழக்காதீர்கள். தயவுசெய்து சிந்தியுங்கள். நேர் வழி காட்ட அல்லாஹ் மட்டுமே போதுமானவன்.
அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தை தின்னுங்கள்! நீங்கள் இந்த கட்டுரையை விடுவத்ததின் நோக்கம் என்னவென்று நீங்கள் சொல்லாமலேயே எனக்கு புரிகிறது.அதாவது பாக்கர் விபச்சாரம் செய்தாலும் அவர் ததஜ மூலம் தண்டனை பெற்றுவிட்டார் ஆகவே அவரை பற்றி பேசுவது புறம் என்று தானே இதை நீங்கள் சொல்லாமல் சொல்லுகிறீர்கள்?
நீங்கள் சொல்வதை போலவே வைத்து கொள்வோம் மாயிஸ் ரழி அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மரண தண்டனை பெற்று இருக்கிறார். ஆனால் உங்கள் பாக்கர் ததஜ விடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மரன தண்டனை பெற்றார அல்லது இறந்துதான் போனாரா? இன்னும் உயிருள்ள பிணமாக இருந்து கொண்டு செய்த குற்றத்தை நியாயம் அல்லவா படுத்துகிறார் உங்கள் மன்மதன் பாக்கர்.செய்த குற்றத்தை நியாய படுத்து ஒரு கேவலமான ஜென்மத்தை பற்றி மக்களிடம் கூறி அவரிடம் இருந்து மக்களை காப்பாற்றுவது புறம் இல்லை சகோதரரே so இந்த பருப்பு எல்லாம் மக்களிடம் வேகாது புதுசா ட்ரை பண்ணுங்க சகோதரரே.
இதையும் வெளி இடுங்கள் வெட்கம் இல்லாமல்.
-இஸ்மாயில் புதுமடம்.
Click for Video
Source:
No comments:
Post a Comment