ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, January 30, 2011

ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !!


ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !!







* தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில்
 தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே
 தொழுவேன்!. மற்ற பள்ளி வாசல்களில் ஜனாசா தொழுகை மட்டும்
தொழுவேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா  “தீ”

* நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும்
தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!.
ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”
* நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரையும்
 கிண்டலும் கேலியும் செய்வேன்!. என் நண்பர்கள் என் இயக்கத்தை
பற்றி பேசினால் கண்கள் சிவக்க கோபப்படுவேன் ஏன் என்றால்
 நான் தவ்ஹீத்வா “தீ”
* மேலை நாடுகளின் பொருட்களை வாங்காதீர்கள், அவர்களின்
கலாச்சாரத்தை பின்பற்றாதிர்கள் என்று எல்லோருக்கும் சொல்வேன்!.
ஆனால் அந்த பொருட்களை என் விட்டில் உபயோகப்படுத்துவேன்.
அவர்களின் கலாச்சாரத்தை நான் பின்பற்றுவேன் ஏன் என்றால் நான்
தவ்ஹீத்வா “தீ”

* பேராசை கூடாது என்று உபதேசம் சொல்வேன்!. ஊரில் உள்ள
நிலங்களை
எல்லாம் வலைத்து போட்டு பிறகு விலை ஏற்றி விற்ப்பேன் ஏன்
என்றால்
 நான் தவ்ஹீத்வா “தீ”

* ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்பேன்!. ஆனால் நான்
சுக போகமாக நவீன கண்டுபிடிப்புக்களுடன் வாழ்வேன் ஏன்
 என்றால் நான் தவ்ஹீத்வா“தீ”

* மேலும் நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம் என்று
குர் ஆன் வசனம்
 சொல்லி இருந்தும், நான் தவ்ஹித்வாதி என்று மார்தட்டி பிறருடன்
 விவாதம் செய்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற
 நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் மற்றவரிடம் தீவிரமாக மைக் செட்
 முலம் விளாம்பரம் செய்து பணம் வசூல் செய்வேன்!. அதற்க்கு
அப்புறம் நான் அவர்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் ஏன் என்றால்
 நான் தவ்ஹீத்வா “தீ

* வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நபிகளின்
போதனைகளை மக்களிடம் பயான் செய்வேன்!. ஆனால் நான் செய்யும்
 உதவிகளை போட்டோ எடுத்து விளம்பரப் படுத்துவேன்!.
ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வா “தீ”

* என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு
 போன்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் என் விட்டில்
 உள்ளவர்களை அழைக்காமல்,
ஊரில் உள்ளவர்களை இலவச வாகனம் முலம் அழைத்துச்
 செல்வேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* சொந்த ஊரில் ஆடு, மாடுகள் விலை குறைவாக கிடைக்கும்
 போது அதை வாங்கி குர்பானி கொடுக்காமல், விண் செலவு
செய்து ராஜஸ்தான் சென்று அதிகவிலை கொடுத்து ஒட்டகம்
 வாங்கி வந்து அதை விளம்பரப்படுத்தி குர்பானி கொடுப்பேன்!.
ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* புனிதமிக்க ரமலானில் வெளிநாட்டில் இருந்து வரும் பித்ரா
பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கும்போது கூட போட்டோ
எடுத்து விளம்பரப் படுத்துவேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என்னிடம் உள்ள போன்களையும், கம்ப்யூட்டர்களையும்
பயன் படுத்தாமல் கம்பெனியில் உள்ள தொலைபேசிகளையும்,
 பேக்ஸ் மிஷினையும், கம்ப்யூட்டர்களையும் என்
சொந்த விசயத்திற்க்கு பயன்படுத்துவேன்!. ஏன்
என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* வீண் விரயம் செய்யவேண்டாம் என்று நபிகள் நாயகம்
சொன்னார்கள் என்று அழ்கிய முறையில் அடுத்தவருக்கு
 பயான் செய்து விட்டு என் வீட்டு திருமணத்தை பல ஆயிரம்
செலவு செய்து கல்யாண மண்டபத்தில் நடத்தி அதை
விடியோவும் எடுப்பேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* என் இயக்கம் நடத்தும் போராட்டங்களுக்கு அனைத்து
 முஸ்லிம்களையும் அணி திரண்டு வாரீர், வாரீர் என்று
அழைப்பேன், அழைத்தும் செல்வேன்!. ஆனால் முஸ்லிம்
 மக்களின் நல்ல விசயங்களுக்கு பிற அமைப்புக்களூம்,
 ஊரின் ஜமாத்துக்களூம் நட்த்தும் போராட்டங்களுக்கு நான்
போகமாட்டேன் !.ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ்வது சுன்னத்துக்கு
மாற்றமானது (இக்கால கட்டத்தில் குடுப்ம்பத்தோடு இருப்பது
 ரொம்ப அவசியமானது) என்றூம் தெரிந்தும் நான் வெளிநாட்டில்
தனியாக இருந்து இளமையை, காலத்தை கழிப்பேன்!.
ஏன் என்றால்
 நான் தவ்ஹீத்வா “தீ”

* என் வருமானத்திற்க்கு தகுந்தார் போல் என் வாழ்க்கையை
அமைத்துக் கொள்ளாமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ
கிரெடிட் கார்டு வைத்து இருப்பேன் பேங்கில் வட்டிக்கு
 லோனும் வாங்குவேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

* எல்லாவற்றிர்க்கும் குரான், ஹதீஸ் என்று ஆதாரம் கேட்பேன்!.
என் விசயதிற்கு மட்டும் இவ்விரண்டையும் எங்களுக்கு
ஏற்றவாறு வலைப்பேன்!. ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வா “தீ”.

இப்படி ஏராளமான விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்!.
 ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வா  “தீ”.

No comments:

Post a Comment