ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, January 21, 2011

என்ன‌ ஜென்ம‌ங்க‌ள‌டா நீங்க‌ள்?


என்ன‌ ஜென்ம‌ங்க‌ள‌டா நீங்க‌ள்?" என்ற வார்த்தைகள் உங்களுக்கும் சாலப் பொருந்தும் M.S.ஹமீது.


சகோ. எம்.எஸ். ஹமீது அவர்களே!
"உங்க‌ளுக்கு எதிராக‌ க‌ருத்து சொல்லும் இர‌ண்டு வெப்த‌ள‌ங்க‌ளிலும் சில‌ கேள்விக‌ளை கேட்டுவிட்டு இத‌ற்கு ப‌தில் சொல்லாத‌வ‌ரை இனிமேல் எந்த‌ க‌ருத்தும் கூற‌ மாட்டோம் என்று அவ‌ர்க‌ளே அமைதியாக‌ இருக்கிறார்க‌ள்" என்று நீங்கள் எழுதியிருக்கும் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. வாரி இரைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கு மேற்கொண்டு பதிலளிக்க இயலாமல் அப்பாஸின் வாக்குமூலத்தையே 100 கேள்விகளாக்கி, களவாடப்பட்டதாக பாக்கரால் குற்றம் சுமத்தப்படும் இயக்கத்தின் வலைதளத்தில் கொடுத்திருக்கின்றார்கள் என்பது அப்பாஸின் கடிதங்களை படித்துப்பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். எண்ணிக்கையையும் கேள்விகளையும் படிக்கும்போது 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு பொழுதுபோக்கிற்காக "100 மஸ்-அலா" தலைமை அலுவலகத்தில் வரவேற்பு/கடிதங்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளோடு சிலசமயம் பாக்கர் மற்றும் PJ-யின் அலைபேசி தொடர்புகளையும் கையாண்ட அப்பாஸ் போன்றவர்களுக்கு விவஸ்தையற்ற இதுபோன்ற 100 கேள்விகளுக்கு பதிலளிப்பது மிக சுலபமாகவே இருக்கும். எண்ணிக்கையையும் கேள்விகளையும் படிக்கும்போது 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு பொழுதுபோக்காக நான் பார்த்த "100 மஸ்-அலா" நாடகத்தில் வரும் அப்பாஸ் மன்னரின் பாத்திரம்தான் நினைவுக்கு வருகிறது.




இன்றைய அப்பாஸ், தான் எழுதிய கடிதத்தில் PJ-க்கு ஒரு நேரடி எச்சரிக்கையும் கொடுத்திருந்தார், "என்னை அதிகம் சீண்டினால் விசயம் விபரீதமாகும்" என்று. அதற்கு இதுவரை யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அப்பாஸ், மூடிமறைக்க வேண்டிய பல உண்மைகளின் மவுன சாட்சி என்பது தெளிவு. அவர் மவுனம் கலைந்தால் கூட்டிலுள்ள இன்னும் சில பறவைகளும் கலையும்.
பாக்கருக்கு மார்க்கம் தெரியவில்லை என்று சொல்லும் நீங்கள் பாக்கரைத்தானே மிகமுக்கிய பேச்சாளராக கண்டீர்கள்; அவருடைய விளக்கத்தைத்தானே ஏற்றுக்கொண்டீர்கள். சுய சிந்தனை மார்க்கத்திற்கு மிக முக்கியம். இல்லையெனில், கண்மூடித்தனமாக நம்பும் "தக்லீத்"களாக கருதப்படுவோம்.
மார்க்க விசயத்தில் "ப‌ழ‌ம் தின்று கொட்டை போட்ட‌வ‌ர்க‌ள்" என்று நீங்கள் நினைப்பவர்கள்தான் இன்றைய PJ க்கு "மார்க்கம்" என்னும் பழம் தின்ன கற்றுக்கொடுத்தவர்கள். அப்பழத்தில் "BT" வகையை PJ கண்டு, அதை வினியோகிக்க தொடங்கியபோது தின்னக் கற்றுக்கொடுத்தவர்கள் திடுக்கிட்டுப்போய் திரும்பியிருப்பார்கள். (புரியாதவர்களுக்கு: BT என்பது இனமாற்ற விவசாய தொழில்நுட்பத்தில், ஆச்சரிய மகசூல் தரும் புதிய விதையை புகுத்தி மூல விதையை அழிக்கும் உக்தி). தாமதமாக BT-யின் உண்மை தன்மையை விவசாயிகள் புரிந்துக் கொண்டதைப்போல் சில தவ்ஹீது சகோதரர்கள் இப்போது விழித்திருக்கிறார்கள்.
"எவ்வ‌ள‌வு கொள்கை ச‌கோத‌ர‌ர்க‌ள் உங‌க‌ளிட‌ம் தின‌ம் தின‌ம் அறிவுரை சொல்லி கருத்து ப‌திகிறார்க‌ள் உங‌க‌ளுக்கு ஒன்று கூட‌ ம‌ண்டையில் உரைக்கவே இல்லையா? என்ன‌ ஜென்ம‌ங்க‌ள‌டா நீங்க‌ள்.உங்க‌ள் பின்னால் எல்லாம் நாங்கள் ஒரு கால‌த்தில் இருந்தோமே என்று நினைக்கும் போது எங்க‌ளையே நினைத்து எங்க‌ளுக்கு வெட்கமாக‌ இருக்கிற‌து" என்று பதிந்திருக்கின்றீர்கள். தொடர்ந்து வெட்கத்தில் கூனிக் குறுகாமல் சுயசிந்தனையோடு வெளிவாருங்கள். குர் ஆன் மீது நம்பிக்கையுள்ள உங்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும். "நோக்குவார் நோக்குக்கெல்லாம் நுன்பொருள் வாய்க்கும்வண்ணம் ஆக்கியே இறைவன் தந்த அருமறை குர் ஆன் அன்றோ" என்ற இஸ்லாமிய கவிஞர் ஒருவரின் கூற்றைப்போல, உங்களின் நோக்கத்திற்கேற்ற தெளிவு கிடைக்கும்."என்ன‌ ஜென்ம‌ங்க‌ள‌டா நீங்க‌ள்?" என்ற வார்த்தைகள் உங்களுக்கும் சாலப் பொருந்தும்.
"ஒரு சீட் பாக்க‌ருக்கு கேட்டு த‌முமுக‌ வில் சேர்ந்து விடுங்க‌ள்" என்ற உங்களின் ஒப்பற்ற வார்த்தைகளுக்கு எல்லோருக்கும் பொருள் தெரியும். ரசூல்(ஸல்-அலை)அவர்கள், "கியாமத் நாளில் 73 கூட்டங்களாக என் மக்கள் பிரிந்து வருவார்கள் என்று சொன்னது இன்றே நம் கண் முன்பு நிஜமாகி நிற்கும்போது, யாரும் யாரையும் நம்புவதற்க்கில்லை, சுலபத்தில்.
அப்துஹூ - துபை

Source:

No comments:

Post a Comment