ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, March 20, 2011

விமர்சனத்திற்கும் எல்லை உண்டு...


விமர்சனத்திற்கும் எல்லை உண்டு...

E-mailPrintPDF

மூன்று தொகுதிகளை பெற்றது ஏன்? என்ற தலைப்பில் மக்கள் உரிமையில் வெளியான கேள்வி-பதிலுக்கு எதிரொலியாக வந்த மடலை இங்கே பதிவு செய்கின்றோம்.


சமுதாயத்தில் ஒவ்வொரு பணிகளையும் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு அமைப்புகள் பணியாற்றுவதில் தவறில்லை. காரணம், எல்லாப் பணிகளையும் ஒரே அமைப்பால் சிறப்பாக செய்ய முடியாது என்பது உண்மை. ஆனால், அந்த அமைப்புகள் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி, ஒருவருக்கொருவர் தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடாமல் பணியாற்ற வேண்டும் என்பதைத்தான் சமுதாயம் விரும்புகிறது. பெரும்பாலான அமைப்புகள் இவ்விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுகின்றன. ஆனால், ததஜவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் பி. ஜெய்னுலாபுதீன் அவர்கள் தொடர்ந்து தமுமுகவையும், மனிதநேய மக்கள் கட்சியையும் விமர்சித்து வருகிறார். அந்த விமர்சனங்களில் உண்மைகள் எந்த அளவுக்கு இல்லையோ, அதே அளவுக்கு நாகரீகமும் இல்லை.

தேர்தல் அரசியல் தேவையில்லை என போலி தூய்மை பேசும் அவர், எதற்காகத் தேர்தலில் தீவிர ஆதரவுப் பிரச்சாரம் செய்கிறார் என்பது தெரியவில்லை! அரசியலில் இறங்கினால், கொள்கைப் போய்விடும் என கொள்கை பேசும் இவர், எதற்காக அரசியலிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கும்பகோணத்தில் ஊர்வலம் நடத்தினார் என்பது தெரியவில்லை. அவரும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முயலவில்லை. அதை நிரப்ப முயலும் மற்றவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. எந்தவகையிலும் சமுதாயத்திற்கு அரசியல் முன்னேற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

பாஜக விஷயத்தில் தேர்தல் குறித்து எந்த எதிர்தீர்மானமும் போடாதவர், தொடர்ந்து சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கூட ஆதரவு தெரிவிப்போம் என்பவர், மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அவர்களைத் தோற்கடிப்போம் என தீர்மானம் போடுகிறார்.

இறையச்சமும், மனசாட்சியும், சமுதாய உணர்வும் கொண்டவர்கள் இவரது உள்நோக்க நிலை குறித்து புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நமக்கு அதுபற்றி கவலையில்லை. எனினும் எந்த விமர்சனத்துக்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் பி. ஜெய்னுல் ஆபிதீன் எல்லைமீறி விமர்சிக்கிறார். இதை அவரது தொண்டர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

‘நடுநிலை’ பேசும் மற்றவர்களும் அவரது வரம்பு மீறல் குறித்து தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும். அவர் எங்களைக் கடுமையாகச் சாடும் போதெல்லாம் அவரது தொண்டர்களும், நடுநிலை பேசும் ஒருசிலரும் அமைதியாக இருக்கிறார்கள். நாம் பதிலடி கொடுக்கும் போது மட்டும், துடிக்கிறார்கள். இது என்ன அளவுகோல் என்று தெரியவில்லை.

வன்முறையைத் தூண்டும் வகையில் எழுதியும், பேசியும் வரும் அவரது செயல்பாடு இனியும் தொடருமேயானால் தமுமுக தரப்பும் ஜனநாயக வழியில் புறப்படும். அவரது தரங்கெட்ட விமர்சனங்களை தற்போது அவரிடம் இருக்கும் பத்திரிக்கையில் எழுதுவதை நிறுத்தாவிட்டால் நாமும் மௌனம் கலைக்க வேண்டிவரும்.

இப்போது தேர்தல் நேரத்தில் அதை எப்படியாவது செயல்படுத்தி, திருவிடச்சேரி சம்பவங்களைப் போல் ஊர் ஊராக நிறைவேற்ற துடிக்கிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.

அங்கே இன்னமும் எஞ்சியிருக்கும் ஒருசில இறையச்சம் கொண்ட டி.என்.டி.ஜே. சகோதரர்கள் தங்கள் தலைமையைக் கட்டுப்படுத்துவார்கள் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment