தேர்தல் புறக்கணிப்பு மறுபரிசீலனை செய்க வைகோவுக்கு மனிதநேய மக்கள் கட்சிவேண்டுகோள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் புதுவை சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதில் இருந்து விலகி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது .
இமாலய ஊழல்களை செய்து தமிழ் நாட்டை உலக அரங்கில் இழிவு படுத்திய ஊழல் ஆட்சியை அகற்றுவதும் இலங்கை தமிழ் இனப்படுகொலையாளர்களையும் அதனை கண்டிக்காத தமிழின விரோத சக்திகளையும் அதிகாரத்தை விட்டு அகற்றுவதும் , இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அநியாயமாக சுட்டு கொன்று குவித்துவருவதை தடுக்க தவறிய தமிழர் துரோக அரசினை நிரந்தரமாக முறியடித்து வீட்டுக்கு அனுப்புவதே நமது முக்கிய குறிக்கோளாகும் தமிழக மக்களின் எதிர்பார்ர்ப்பும் இதுவாக இருக்கும் நிலையில் மதிமுக தனது நிலையை மறுபரிசீலனைசெய்யவேண்டும் இந்த மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்த அதிமுக கூட்டணியில் மதிமுக இணைந்து ஜனநாயக கடமை ஆற்ற மனித நேய மக்கள் கட்சி அழைப்பு விடுக்கிறது.
No comments:
Post a Comment