ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Sunday, March 27, 2011

ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ தலைமையகத்தில்!


  தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் , மற்றும் வேட்பாளர்கள்   அன்றாடம் INTJ   தலைமையகத்திற்கு வந்து கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் SDPI தலைவர் தெஹ்லான் பாக்கவி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட குழு தலைமையகம் வந்தது! அவர்களை இஸ்லாமிய முகமன் கூறி வரவேற்ற மாநில நிர்வாகிகள் தேர்தல் நிலவரம் குறித்து   பேசினர்.


மேலும் SDPI குறித்த சில விஷயங்கள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டது. குறிப்பாக அவர்களின் விளம்பரம், நோட்டீஸ், போஸ்டர் போன்றவற்றில் 'பிஸ்மில்லாஹ்' தவிர்க்கப்படுவது பற்றியும்,விநாயகர் சதுர்த்தி, பொங்கல் வாழ்த்து பேனர்கள் போன்ற விஷயங்களை சுட்டிக் காட்டி 'இஸ்லாமிய அடையாளங்களை இழந்து தான் நாம் ஆட்சி அதிகாரங்களை பெற வேண்டுமா? எனக் கேட்ட போது அவர்கள் தரப்பில் விளக்கமளித்தனர்.
த.மு.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் போட்டியை  தவிர்க்கும்படி கோரிக்கை விடுக்கப் பட்டது.

No comments:

Post a Comment