ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, April 9, 2011

TNTJ மாநில பொது செயலாளர் மீது தாக்குதல்


TNTJ மாநில பொது செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய SDPI குண்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று(08-04-2011) இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொது கூட்டம்  நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர்ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றி கொண்டு இருந்தார்.  சுமார் 9.40 மணியளவில்SDPI வேட்பாளர் உமர் கத்தாப் தலைமையில், SDPI குண்டர்கள், மாமா கட்சி நிர்வாகிகள் ஆகியோர், மாநில பொது செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். திட்டமிட்டு  SDPI மற்றும் மாமா கட்சி குண்டர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் உட்பட ஏழு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய உமர் கத்தாப், SDPI குண்டர்கள் மற்றும் மாமா கட்சியை சேர்ந்த  சுமார் 25 குண்டர்களை கைது செய்யும் வரை நாம் அங்கிருந்து செல்வதில்லை என்று நம் ஜமாத்தினர் உறுதியுடன் இருந்தனர். இறுதியாக கோவை மாநகர கமிஷ்னர்  சைலேந்திர பாபு சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர் மாவட்ட செயலாளர் நவ்சாத் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சைலேந்திர பாபு, நம் மக்களை கலைந்து செல்லுமாறும் மேலும் ஆர். எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பை விட மோசமாக செயல்பட்ட SDPI மற்றும் மாமா கட்சி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பின்னரே நம் மக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் கலவரத்தில் ஈடுபட்ட SDPI மற்றும் மாமா கட்சி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை உதவி கமிஷ்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவையில் SDPI & மாமா கட்சி குண்டர்களின் வெறியாட்டத்தின் புகைப்படங்கள்……..

SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட ஸ்பீக்கர் பாக்ஸ்













SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட கேமரா லைட்…














அதன் துகள்கள்













SDPI & மாமா கட்சி குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்














தாக்குதலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட கற்கள்














SDPI & மாமா கட்சி குண்டர்களால் தாக்கப்பட்ட சாரமேடு கிளை பொறுப்பாளர்













கோவை மாநகர உதவி கமிஷ்னர் உமா அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கோவை மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்














மேடையில் நின்றவர்கள் மீது வீசப்பட்ட கற்கள் மற்றும் காலணிகள்














SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட Stage Back Drops













 SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கபடுவதற்கு  முன்பு Stage  Back Drops












SDPI & மாமா கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  மேலும் சிலர்……..





































SDPI & மாமா கட்சி குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்துவற்கு முன், ஆர். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் உரையை கேட்க கூடியிருந்த மக்களில் ஒரு பகுதியினர்


SDPI & மாமா கட்சி குண்டர்கள் எவ்வளவு பெரிய தைரியசாலிகள் என்பதை தோலுரித்து காட்டும் வீடியோ ஆதாரங்கள் இன்னும் சில மணித்துளிகளில், இன்ஷா அல்லாஹ்……….

No comments:

Post a Comment