ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, May 28, 2011

மாமா கட்சியின் இஸ்லாமிய துரோகமும் வேடமும்..


வாசகர் கருத்து:
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்
மேல குறிப்பிட்ட தலைப்பில் தமுமுக வலைத்தளத்தில்செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். இப்படி தலைப்பு போட்டு செய்தி போட இவர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் ரோசம் இருக்கிறதாஇவர்கள் முஸ்லிம்களை அறிவிலிகள் என்று நினைத்துக் கொண்டார்களாஏனெனில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியதில் இவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம் என்று சொல்லுகின்றனர். ஆனால் இவர்கள் தான் முஸ்லிம் லீக்கின் மூன்று உறுப்பினர்களும் தமிழகத்தில் தோல்வியடைய கடுமையாக பிரச்சாரம் பண்ணியவர்கள். மேலும் மூன்று முஸ்லிம்கள் தோல்வியடையவும் ஆவேச பிரச்சாரம் பண்ணியவர்கள். எனவே இவர்கள் சமுதாய அக்கறைமுஸ்லிம் உறுப்பினர்கள் என்று சொல்லுவதெல்லாம் வெளி வேஷம் மட்டுமே. பதவிக்காக எதையும் செய்யும் தயாராக இருக்கும் பதவி வெறியர்கள் தமுமுகவினர்கள் என்பதை சமுதாயம் முழுவதும் உணர்ந்து கொள்ளும் நாள் வெகு விரைவில் வரத்தான் போகின்றது.


தமுமுக தோற்கடித்த முஸ்லிம் வேட்பாளர்கள்:
1. அப்துல் பாசித் - முஸ்லிம் லீக் - வாணியம்பாடி - (வெற்றி பெற்றவர்: சம்பத் குமார்)
2. ஷேக் தாவூத் - முஸ்லிம் லீக் - நாகப்பட்டினம் - (வெற்றி பெற்றவர் : ஜெயபால்)
3. அல்தாப் ஹுசைன் - முஸ்லிம் லீக் - துறைமுகம் - (வெற்றி பெற்றவர்: பழ. கருப்பையா)
4. ஹசன் முகமது அலி ஜின்னா - திமுக- ஆயிரம் விளக்கு - (வெற்றி பெற்றவர்: வளர்மதி)
5. உபையதுல்லா - திமுக - தஞ்சாவூர் - (வெற்றி பெற்றவர்: எம். ரங்கசாமி)
6. கௌஸ் பாஷா - திமுக - மதுரை மத்திய தொகுதி - (வெற்றி பெற்றவர்: சுந்தர் ராஜன் )
7. சையது - காங்கிரஸ் - கிருஷ்ணகிரி - (வெற்றி பெற்றவர்:முனுசாமி)
8. முஹம்மத் யூசுப் - வி.சி - உளுந்தூர்பேட்டை - (வெற்றி பெற்றவர்: குமரகுரு)
ஒருவேளை வெற்றி பெற்ற சம்பத் குமார்ஜெயபால்பழ. கருப்பையாவளர்மதிஎம். ரங்கசாமிசுந்தர் ராஜன் ,முனுசாமிகுமரகுரு எல்லாம் இஸ்லாத்திற்கு மாறுகிறேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் (ச.ம.உ) அவர்களிடம் சொன்னார்களோ என்னவோ. அதனால் தான் இவர்களின் வெற்றிக்கு தமுமுக முழுமூச்சாய் பாடுபட்டிருக்கிறது. இதற்கு பிறகும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்று எங்களின் காதில் பூ சுற்ற வேண்டாம் என்று தமுமுகவை சமுதாயத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment