ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, May 14, 2011

நேர்மறையான மாற்று அரசியலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பலத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது : இ அபூபக்கர்


 


கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி முக்கிய காரணியாக பங்காற்றியுள்ளது என சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தலைவர் இ அபூபக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலங்களில், மக்கள் தேர்ந்தெடுக்க ஊழல் பாரம்பர்யமிக்க ஒரே விளைவை ஏற்படுத்தக்கூடிய இரு கூட்டணிகள் மட்டுமே இருப்பதால் ஆளுங்கட்சிக்கேதிராக எதிர்கட்சிக்கு மாறி மாறி வாக்களிப்பது என்பது அரசியல் பாரம்பர்யத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை.


தற்போதுள்ள அரசியல் அமைப்பில் தங்களுடைய உடனடி எதிரியாக அவர்கள் கருதும் ஆளுங்கட்சியை வீழ்த்த தகுதியான கூட்டணிக்கே வாக்களித்து அதிருப்தியை தெரிவிப்பதை தவிர இந்த குடிமக்களுக்கு வேறு வழியில்லை .
துரதிர்ஷ்டவசமாக இதுவே தமிழகத்திலும் கேரளாவிலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி ஏற்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கோ அல்லது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கோ மக்கள் அருதிப்பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெற வைக்காமல் இருப்பதே மாற்று அணி உருவாக்க வழிவகுக்கிறது.
மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு பெரும் சுமையாக இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை வாக்காளர்கள் தூக்கி எறிய வாய்ப்பை எதிர்பார்த்து இதுவரை காத்திருந்தனர்.
கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் கூட்டணிகள் அமைக்காமல் தனியாக களமிறக்கப்பட்டிருந்த சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் இந்த மாநிலங்களில் சுமார் நூற்றி ஒரு 101 தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். ஒரு சில தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள வாக்குக்கள் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்குகளாக அமைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
SDPI பொருத்தமட்டில் இது முதல் சோதனை முயற்சி. பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெரும் நமது நேர்மறையான மாற்று அரசியலுக்கு பலத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் தந்துள்ளது என இ அபூபக்கர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த தேர்தலில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் கட்சி செயல்வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment