ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, May 14, 2011

ம.ம.க வெற்றி


தித்திப்பான திருப்புமுனைகள்

E-mailPrintPDF
தமுமுக தலைவரும் தமுமுக பொதுச் செயலாளரும்

இராமநாதபுரம் சட்டமன்றத்தில் வெற்றி வாகை சூடிய பின்னர் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வை வரவேற்கும் சகோதரர்கள்.




மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (அல்ஹம்துலில்லாஹ்)

ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும் 2007 ல் மாவட்ட செயலாளராகவும்இ 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ்இ உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment