SLTJ கம்பளைக் கிளை சார்பாக பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பெருநாள் திடல் தொழுகை.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பலைக் கிளை சார்பாக வரலாற்றில் முதன் முதலாக கம்பளையில் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. ஏகத்துவ எதிர்பாளர்களின் பலத்த எதிர்பையும் மீறி நடத்தப்பட்ட இந்தத் தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டதின் மூலம் ஏகத்துவ எதிர்பாளர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் தொழுகையை அறிவிக்கும் விதமாக ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர்களும் கிழிக்கப்பட்ட நிலையில் இவ்வளவு கூட்டத்தைத் தந்துதவிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக ஏகத்துவ எதிர்பாளர்கள் எடுத்த அனைத்து முயற்சியையும் முரியடித்து இறைவன் இறுதியில் ஏகத்தவத்திற்கு வெற்றியைத் தந்தான்.
பெருநாள் திடல் தொழுகை மற்றும் பெருநாள் சிறப்புரையை “அழைப்பு” மாத இதழின் துணை ஆசிரியரும் ஜமாத்தின் பிரச்சாரகருமான சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் நிகழ்த்தினார்கள்.





No comments:
Post a Comment