அண்ணனின் கடிதத்தை அம்பலப் படுத்தலாமா? ஒரு விளக்கம்.
அண்ணனின் கடிதத்தை அம்பலப் படுத்தலாமா? ஒரு விளக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும்! அன்பார்ந்த சகோதரர்களே! அண்ணனின் இமெயில் களை அம்பலப் படுத்தி அவரை இழிவு படுத்தலாமா? என சில சகோதரர்கள் கேள்வி எழுப்புகிறனர். மற்றவர்களின் சிறிய தவறுகளை ஊதிப் பெரிதாக்கி அவர்களின் மானத்தோடு அண்ணன் விளையாடிய போது இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை. மற்றவர்களின் மானத்தோடு விளையாடுவதற்கு என்றே ஒரு பினாமி வலைத் தளத்தை இன்னும் நடத்திக் கொண்டுள்ளவர்கள் பற்றி ஏனோ இவர்களுக்கு தெரியவில்லை. மற்றவர்களை விடுங்கள் நான் உம்ரா சென்றிருந்த போது நான் எழுதாத கடிதத்தை பாக்கருக்கு எழுதியதாக பொய்யாக என்னுடைய கை எழுத்திட்டு எனக்கும் பாக்கருக்கும் பிரச்னை என்று இணையத்திலும் , ஜெராக்ஸ் மூலமும் எனது குடும்பத்தை இழுத்து அவதூறு பரப்பிய அயோக்கியர் தான் இந்த பொய்யர். இன்றைக்கு உலகம் அறிந்த அவரது இமெயில் இல் இருந்து அவர் அனுப்பிய மற்றும் அவருக்கு வந்த ஆபாச மெயில்கள் எனக்கு கிடைக்கும் போது நான் அதை வெளியிடக் கூடாது என்றால் என்ன நியாயம்? 
கேள்வி எழுப்புவோர் என்னுடைய இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவும். அவருடைய மெயில் கள் திருடப் பட்டதை அவரே ஒப்புக்  கொண்டுள்ளார்.  எங்களின் இயக்கத்தை திருடி தன் குடும்ப பெயரில் பதிவு செய்த போது ' இவர்கள் ஏன்  பதிவு செய்யவில்லை ?   என்றும் தங்கள்  இயக்கத்தின் பெயரை காப்பாற்ற முடியாதவர்களா மக்களைக் காக்கப் போகிறார்கள்  ? என ஏகடியம் பேசியவர்கள் இன்றைக்கு தன் மெயில்களைக் கூட காப்பாற்ற முடியாமல் தலை குனிந்து நிற்கும்  தலைவனுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்?   ஆகவே பாதிக்கப் பட்டவனின் மன நிலையில் இருந்து எதையும் பார்க்க வேண்டுமே அன்றி 'பிரசாரகர்  இப்படி செய்யலாமா? என்றால் அவர் என்னை விட பெரிய பிரசாரகர் இல்லையா? எந்த ஆயுதத்தை வைத்து மற்றவர்களை வீழ்த்தினாரோ அந்த ஆய்தம் இன்றைக்கு என் கைக்கு கிடைக்கும் போது அஹிம்சை பேசுவது நியாயமா?   அநீதி இழைக்கப் பட்டவனுக்கு அல்லாஹ்வே அதே அளவில் அனுமதி அளித்துள்ளான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.  -செங்கிஸ்  கான், 

No comments:
Post a Comment